கேரள கடல் பகுதியில் ரூ.1,526 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் ..

கேரள கடல் பகுதியில் நேற்று வருவாய் புலனாய்வு பிரிவினரும், கடலோர பாதுகாப்பு படையினரும் நடத்திய வேட்டையில் ரூ.1,526 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட ஹொரோ யின் கடத்தலில் ஈடுபட்டவர்கள் இன்று கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை நடத்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்

இந்தியாவிற்குள் கடல் வழியாக போதை பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, கேரள கடல் பகுதியில் நேற்று வருவாய் புலனாய்வு பிரிவினரும், கடலோர பாதுகாப்பு படையினரும் நடத்திய வேட்டையில் ரூ.1,526 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை கடத்தி வந்ததாக 2 படகுகளும், அதில் இருந்த 20 பேரும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் 16 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த குளச்சல் மற்றும் தூத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் மிகப்பெரிய அளவில் போதை பொருள் சிக்கியிருப்பது இது 4-வது முறையாகும். இதற்கு முன்பும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருந்தாலும் இப்போது பெரிய அளவில் போதை பொருள் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தற்போது இந்த ஆபரேசன் எப்படி நடந்தது, அதிகாரிகள் போதை பொருள் கடத்தல் கும்பலை எப்படி? கைது செய்தனர் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவிற்குள் போதை பொருள் கடத்தலில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த கும்பல் ஈடுபடுவதை மத்திய உளவுத்துறை முதலில் கண்டுபிடித்தது. இதனை அவர்கள் வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கும், கடலோர பாதுகாப்பு படையினருக்கும் தெரிவித்தனர்.இதையடுத்து கடத்தல் கும்பலை பிடிக்க வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் இணைந்து ஆபரேசன் கோஜ்பீன் என்ற திட்டத்தை உருவாக்கினர். இந்த திட்டத்தை நிறைவேற்ற திறமையான அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர்.அதிகாரிகள் குழு ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய கடல் எல்லைக்குள் வரும் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்திய பெருங்கடல், வங்க கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகள் அனைத்தும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன.

சந்தேகப்படும் மீன்பிடி படகுகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். சுமார் 10 நாட்களுக்கு மேலாக அவர்கள் நடுக்கடலில் கொக்குபோல காத்திருந்தனர்.இந்த நேரத்தில் தான் கடலில் சூறாவளியும், கொந்தளிப்பும் ஏற்பட்டது. அதனை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் இரவு பகலாக காத்திருந்தனர். அவர்களின் காத்திருப்புக்கு நேற்று பலன் கிடைத்தது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வந்த கப்பலில் இருந்து சில மூட்டைகள் 2 மீன்பிடி படகுகளில் ஏற்றப்படுவதை கண்டனர். அந்த படகுகள் மூட்டைகளை ஏற்றியதும், அரபிக்கடல் பகுதிக்குள் புகுந்து கேரளா நோக்கி விரைந்தது.
அந்த படகுகளை விரட்டிச்சென்ற கடலோர பாதுகாப்பு படையினர் படகுகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். படகுக்குள் மீன்கள் எதுவும் இல்லை. மாறாக அங்கு மூட்டை மூட்டையாக போதை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 220 கிலோ ஹெராயின் இருந்தது.

இந்த தகவல் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆபரேசன் சக்சஸ் ஆனதை தொடர்ந்து கைப்பற்றப்பட்ட போதை பொருள் கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.கொச்சியில் வைத்து கைதானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கைதான 20 பேரில் 16 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பறிமுதல் செய்யப்பட்ட 2 படகுகளும் குளச்சல் மற்றும் தூத்தூர் பகுதியைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது.

இதையடுத்து படகின் உரிமையாளர்களை பிடித்து விசாரிக்க வருவாய் புலனாய்வு அதிகாரிகள் குழுவினர் நேற்றிரவே குமரி மாவட்டம் வந்தனர். தூத்தூர் மற்றும் குளச்சல் பகுதிகளில் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே நடுக்கடலில் கைது செய்யப்பட்ட குமரி மீனவர்கள் உள்பட 20 பேரையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இன்று கொச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி
அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது போதை பொருளை கேரளாவில் யார் யாருக்கு வழங்க இருந்தனர் என்பதை விசாரித்து அவர்களையும் கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளனர்.

IMG 20220521 113730 - 2026
202205211020121639 Tamil News Tamil News Rs 1526 crore worth of heroin seized in Kerala SECVPF - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories