பிரதமர் மந்திரி கிசான் திட்டம்: தவணைக்கான நிதி.. கடைசி தேதி..!

Published:

Prime Minister Kisan Project - 2026

பிரதமர் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் 11-வது தவணைக்கான நிதியை பெற eKYC விண்ணப்பிக்கும் கடைசி தேதியை அரசாங்கம் நீட்டித்துள்ளது.

பிரதமர் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் என மொத்தம் மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ. 6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படும். 10 -வது தவணை கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டது.

பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். பிரதமர் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் 11-வது தவணைக்கான நிதியை பெற eKYC விண்ணப்பிக்கும் கடைசி தேதியை அரசாங்கம் நீட்டித்துள்ளது.

இதற்கான காலக்கெடு மார்ச் 22, 2022 முதல் மே 31, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மந்திரி கிசான் இணையதளத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “அனைத்து பிரதமர் கிசான் திட்ட பயனாளிகளுக்கு eKYC இன் காலக்கெடு 31 மே 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

11வது தவணை ஜூன் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் pmkisan.gov.in என்ற இணையத்திற்கு செல்ல வேண்டும். பிறகு eKYC-இன் இணைப்பு வலது பக்கத்தில் காணப்படும்.

அங்கு ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் மொபைலில் 4 இலக்க ஓடிபி வரும் அதை உள்ளிடவும். அடுத்து உங்கள் eKYC செயல் முடிக்கப்படும்.

ஒரு வேலை தவறானது என்று வந்தால் நீங்கள் ஆதார் சேவை மையத்திற்குச் சென்று சரி செய்து கொள்ளலாம்.

பிரதமர் கிசான் சம்மன் நிதி பயனாளியின் நிலையை அறிய விரும்புவோர், முதலில் https://pmkisan.gov.in/BeneficiaryStatus.aspx க்கு செல்ல வேண்டும்.

பின்னர் அதில் ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் மொபைல் எண் மூலம் PM கிசான் சம்மன் நிதி நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.

Related articles

Recent articles

spot_img