பி.எஸ்.எப் நடத்திய சோதனையில் பிடிபட்ட ரூ.6.15 கோடி கடத்தல் தங்கம் ..

எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் ரூ.6.15 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டது.

வடக்கு 24 பர்கானாஸ், வங்காளதேச எல்லையையொட்டிய பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் பி.எஸ்.எப். தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி, வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தல் தங்கம் வருகிறது என்ற அடிப்படையில் எல்லை பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், ஐ.சி.பி. பெட்ராபோல் பகுதியில் வந்த லாரியை மடக்கினர். அதில் ஓட்டுனரின் இருக்கைக்கு பின்னால், கருப்பு துணியால் மூடியிருந்த பெரிய பொட்டலம் ஒன்றில் 70 தங்க பிஸ்கெட்டுகள் இருந்தன. 3 தங்க கட்டிகளும் இருந்துள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 கோடியே 98 லட்சத்து 54 ஆயிரத்து 165 ஆகும்.

இதனை தொடர்ந்து அனைத்து தங்க பிஸ்கெட்டுகள், தங்க கட்டிகள் மற்றும் லாரியை படையினர் பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுனரையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். அந்த ஓட்டுனர் ராஜ் மண்டல் (26). பங்காவன் நகரின் ஜாய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. இந்த கடத்தலில் இந்தியரான சகாபுதீன் மண்டல் என்பவருக்கு மறைமுக தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளது.

வழக்கம்போல் ஜெயந்திப்பூர் சோதனை சாவடி பகுதியில் படையினர் நடத்திய சோதனையில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த நபரிடம் சோதனை நடத்தப்பட்டது. அதில், 466.62 கிராம் எடை கொண்ட 4 தங்க பிஸ்கெட்டுகளை படையினர் கைப்பற்றினர்.

அந்த நபர் மரூப் மண்டல் (36) என தெரிய வந்துள்ளது. இந்தியரான அவர் எல்லைக்கு அந்த பக்கம் வசித்து வந்துள்ளார். வங்காளதேசத்தின் ஜெஸ்சூர் மாவட்டத்தில் உள்ள பப்லு மண்டல் என்பவரிடம் இருந்து தங்க பிஸ்கெட்டுகளை வாங்கி கொண்டு வந்துள்ளார். அதனை ஹபீசுல் ஷேக் என்பவரிடம் ஒப்படைக்க இருந்த நிலையில், பி.எஸ்.எப். வீரர்கள், சோதனையில் தடுத்து நிறுத்தி அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். கடத்தல்காரர்கள் இருவரும் கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகளுடன், பெட்ராபோல் சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6.15 கோடி என சங்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

704749 sfagt 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories