கேட்ட வரங்கள் எல்லாம் கிடைக்கும்: சமாதி நிலையில் நித்தியானந்தா ஸ்டேட்மெண்ட்!

Published:

nithi - 2026

நான் சமாதியில் இருந்து வரங்கள், பிரார்த்தனைகள், விருப்பங்கள் ஆகியவற்றை வழங்குவேன் என இரவில் நித்யானந்தா பகீர் கிளப்பியுள்ளார்.

கைலாசா நாட்டின் அதிபர் என கூறிக் கொண்ட நித்யானந்தா கடந்த 6 மாதங்களாக உணவு சாப்பிட முடியாமல் தவித்து வருகிறார். அவரது உடல்நலனுக்கு என்னவென்றே தெரியவில்லை. ஆனால் அனைத்து மருத்துவப் பரிசோதனை முடிவுகளும் நார்மலாகவே இருக்கிறது என்கிறார். ஆனால் அவர் ஏன் வீடியோவில் தோன்றவில்லை என தெரியவில்லை.

வழக்கமாக சத்சங்களில் பங்கேற்காமல் பேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தா பதிவுகளை போட்டு வருகிறார். அவரால் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு நகர கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தன்னால் ஒரு இட்லியை கூட முழுசாக சாப்பிட முடியவில்லை என்றும் 20 நிமிடங்கள் கூட தொடர்ந்து தூங்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அவர் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில் சமாதியின் உள்ளே இருந்து நேரடி கவரேஜ் என போட்டுள்ளார்.

nithi 2 - 2026

சமாதியின் உண்மையான அர்த்தம் என்னவெனில் சம+ ஆதி. அனைத்தும் சம நிலையை அடைவதாகும். அதாவது என் உடல், மனம், உணர்வுகள், பயோ மெமரி, பயோ எனர்ஜி ஆகியவை எல்லாம் சம நிலையை அடைந்து மீண்டும் பழைய நிலையை அடையும்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

வாதம், பித்தம், கபம் ஆகிய 3 தோஷங்களும் சமமாக இருக்க வேண்டும். இதன் பொருள் என்னவெனில் உடலில் தேங்கியுள்ள கொழுப்பு மற்றும் ஜீரணமாகாத உணவு பல வடிவங்களில் உடலை விட்டு வெளியேறுகிறது.

உடல் முற்றிலும் நச்சுத்தன்மை பெறுகிறது. அதனால்தான் வெளிப்புற உணவு இல்லை அல்லது வழக்கமான தூக்கம் இல்லாமல் இருக்கிறேன்.

இட கல நாடி, பிங்கல நாடி, சூஷூம நாடி ஆகிய 3 நாடிகளும் சமநிலை பெறுகின்றன. இதனால் சுவாசம் மற்றும் தசாப்பிராணங்கள் சீரமையும். கர்மாக்கள் சுத்திகரிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.

nithi 1 1 - 2026

நான் இந்த சமாதி நிலையில் இருக்கும் போது மக்கள் கேட்ட வரங்கள், பிரார்த்தனைகள் , விருப்பங்கள் அனைத்தும் கிடைக்கும். பரமசிவனிடம் இருந்து ஆற்றல் கிடைக்கப்பெற்று அது தீவிரமடைந்து அனைவரின் ஆசைகளையும் நிறைவேற்றம். நான் சமாதியில் இருக்கும் போது மக்களின் கேட்கும் கேள்விகளுக்கு உள்ளே இருந்து கொண்டே நான் பதில் அளிக்கப்படுகிறது. நான் அனைவரிலும் ஒன்றாக கலந்து விட்டேன்.

நான் சமாதியில் இருக்கும் போது வெறுப்பாளர்களுக்கும் எதிரிகளுக்கும் என்னை தூற்றுவதற்கு சக்தியை இழந்துவிடுவார்கள்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

ஒவ்வொருவரின் கடந்த கால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை, மற்றும் எதிர்கால வாய்ப்புகள் மற்றும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏற்ப நான் ஒவ்வொருவராகப் பார்க்கிறேன்.

பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் என் அன்பு மீண்டும் பொழிகிறது என அந்த பதிவில் நித்யானந்தா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img