Homeசற்றுமுன்கேரள சட்டசபையில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாடு துவக்கம்.....

கேரள சட்டசபையில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாடு துவக்கம்.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்புரை..

கேரள சட்டசபையில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைத்தார்.

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ‘ஆசாதி கா அமிர்த் திருவிழா’ வின் தொடர்ச்சியாக பெரும்பாலான மாநில சட்டசபைகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாட்டை திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா சட்டசபையில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார். இன்று காலை திருவனந்தபுரம் சட்டசபையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

ஆழமான வேரூன்றிய சமூக தப்பெண்ணங்களால் தொழிலாளர்களில் பெண்களின் விகிதம் அவர்களின் சாத்தியக்கூறுக்கு அருகில் இல்லை, இது உலகளாவிய நிகழ்வு என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியபோது தெரிவித்த அவர் மக்களின் மனநிலையில் மாற்றத்திற்கு அழைப்பு விடுத்தார்.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில், நாட்டில் உள்ள பல்வேறு சட்ட மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

நாட்டின் 75 ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கேரள சட்டமன்றத்தில் நடைபெற்ற தேசிய மகளிர் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் தனது தொடக்க உரையில், ஜனாதிபதி 1857 முதல் பெண்கள் “நட்சத்திர பங்கை” வகித்ததாக கூறினார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான பல போராட்டங்களிலும் அவர்களின் பரவலான பங்கேற்பின் காரணமாக வெற்றி பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள சபாநாயகர் ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த 2 நாள் மாநாட்டை முன்னிட்டு பல்வேறு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. இதில் குஜராத் மாநில சபாநாயகர் நிமாபென் ஆச்சார்யா, திமுக எம்பி கனிமொழி, முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார், முன்னாள் எம்.பி. பிருந்தா காரத் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்தியாவிலேயே முதன்முதலாக நடைபெறும் இந்த தேசிய மாநாட்டில் 17க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து சட்டமன்ற பெண் உறுப்பினர்கள், எம்பிக்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு திருவனந்தபுரம் வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை திருவனந்தபுரம் விமானப்படை விமான நிலையத்தில் கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், அவரது மனைவி ரேஷ்மா ஆரிப், அமைச்சர் ஆண்டனி ராஜு மற்றும் பலர் வரவேற்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் அவரது மனைவி சவிதா கோவிந்த் மற்றும் மகள் ஸ்வாதி ஆகியோரும் வந்துள்ளனர்.

kovind kerala - Dhinasari Tamil
ram nath kovind president - Dhinasari Tamil

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,145FansLike
375FollowersFollow
65FollowersFollow
74FollowersFollow
2,741FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ள்ள விக்ரம்.. நன்றி தெரிவித்த கமல்..

உலகம் முழுவதும் விக்ரம் ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....

பிரபலமாகி வரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் ..

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பிரபலமாகி வருகிறது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர்...

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு காரைப் பரிசளித்த கமல் ..

விக்ரம் படம் வெற்றியடைந்ததையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு காரைப் பரிசளித்து கௌரவ படுத்தினார்...

தாத்தா வசனத்தை தாத்தாவிடமே நடித்துக் காட்டும் பேத்தி!

தனது தாத்தா முன்பு அவருடைய காமெடி வசனத்தை பேசி நடித்து அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest News : Read Now...