மதுரையில் அனுமதியில்லாமல் வளர்த்த யானை பறிமுதல்..

மதுரையில் உரிய அனுமதியில்லாமல் வளர்த்துவந்த யானையை வனத்துறை யினர் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தல்லாகுளத்தை சேர்ந்தவர் மாலா. இவர் தனது வீட்டில் 22 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்றை வளர்த்து வந்தார். அதனை பராமரிக்க பாகன் ஒருவரை நியமித்திருந்தார். மாலா தனது யானையை கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டு வந்திருக்கிறார்.

அவர் உரிய அனுமதியில்லாமல் யானையை வளர்த்து வருவதாக மதுரை மாவட்ட வன அலுவலர் குருசாமிக்கு தகவல் வந்தது. அதன் பேரில் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து 30 பேர் அடங்கிய வனக்குழுவினர் நேற்று இரவு தல்லாகுளத்தில் உள்ள மாலா வீட்டிற்கு சென்றனர்.

வனத்துறையினருடன் கால்நடை மருத்துவ குழுவினரும் சென்றனர். யானைக்குரிய ஆவணங்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த யானை உரிய ஆவணங்கள் இன்றி வளர்க்கப்பட்டது தெரிய வந்தது. அது குறித்து மாலாவிடம் வனத்துறையினர் விசாரித்தனர்.

அந்த யானை பீகார் மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து மாலா யானைக்கு ரூபாலி என பெயரிட்டு வளர்த்து வந்திருக்கிறார். அதற்கான ஆவணங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என அவர் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அந்த பெண் யானையை வனத்துறையினர் அங்கிருந்து மீட்டு கொண்டு செல்ல முயன்றனர்.

ஆனால் அதற்கு மாலா எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்த அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீசார் உதவியுடன் யானையை வனத்துறையினர் மீட்டனர்.

பின்பு அதனை அங்கிருந்து திருச்சிக்கு கொண்டு செல்ல முயன்றனர். அந்த யானையை பராமரித்து வந்த அந்த பாகன் வனத்துறையினர் வந்த போதே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பாகன் இல்லாததால் லாரியில் ஏற யானை மறுத்தது. இதனால் யானையை லாரியில் ஏற்ற மாற்று பாகன் வரவழைக்கப்பட்டார்.

அவரின் உதவியுடன் சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரியில் யானை ஏற்றப்பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு யானை கொண்டு செல்லப்பட்டது. 

1653631109762 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories