திருப்பூரிலிருந்து பாம்புகளை கடத்தி கேரளாவில் விற்பனை செய்ய முயன்ற 5 பேர் கைது..

தமிழ்நாட்டில் திருப்பூரிலிருந்து இருதலை பாம்புகளை கடத்தி வந்து கேரளாவில் விற்பனை செய்ய முயன்ற 5 பேரை கேரள வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, கோழிக்கோடு வனத்துறை விஜிலன்ஸ் அதிகாரி சுனில் குமாருக்கு  ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உதவியுடன் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.அபோது வீட்டினுள் இருந்த 5 பேரும் அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓட முயன்றார்கள். வனத்துறை அதிகாரிகள் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.

பின்பு அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தபோது ஒரு பையில் இரண்டு இருதலை பாம்புகள் இருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் பாம்புகளை பறிமுதல் செய்து ஐந்து பேரையும் கைது செய்து அவர்கள் வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்பு 5 பேரையும் கருவரகுண்டு வனத்துறை தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 5 பேரும் தமிழ்நாடு திருப்பூரை சேர்ந்த ராஜாமுகமது ( 39),கேரள மாநிலத்தை சேர்ந்த அப்துல் கரீம் (42) ,கமருதீன் (40) ,அனிபா முகமது (46), ஆனந்தன் (28) என்பது தெரிய வந்தது. இவர்கள் ஐந்து பேரும் திருப்பூரிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து 2 தலையுள்ள பாம்புகளை வாங்கி வந்து 10 லட்சம் ரூபாய்க்கு கேரளாவில் ஒரு நபருக்கு விற்பனை செய்வதற்காக முயற்சி செய்ததாகவும்,அதனால் ஐந்து பேரும் இரண்டு பாம்புகளுடன் அப்துல்கரீம் வீட்டில் வந்து தங்கி இருந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும்,பாம்பை விலைக்கு வாங்குவதாக கூறிய நபரை தேடி வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

713268 07 kerala 30 05 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories