அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி..

Published:

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி (ஜூன் 23) நடைபெறும் என அக்கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் தற்காலிக கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது. அதிமுக கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்அளில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி முக்கிய முடிவுகள் எடுக்கலாம் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
717588 as - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img