kodaikkanal road parking - 2026

போக்குவரத்துக்கு இடையூறா லாரிகள் நிறுத்துவதை தடுங்களேன் ப்ளீஸ்!

Reporters Diary அடடே... அப்படியா? சுற்றுலா மதுரை
kodaikkanal road parking - 2026

திண்டுக்கல்: சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் பெருமாள் மலை, பழனி செல்லும் முக்கிய சாலையில் இருபுறங்களிலும் லாரிகள் மற்றும் சிறிய வாகனங்களை நிறுத்தி வைத்து பாதைகளை முற்றிலுமாக மறைத்து விடுகின்றனர்.

அதேபோல், காலையிலும் மாலையிலும் பள்ளிக்கு செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சாலையில் மரித்து இருக்கும் வாகன ஓட்டிகளிடம், கூறினால் பொதுமக்களை ஆபாச
வார்த்தைகளால், பேசுவதாகவும் சண்டையிடுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

சாலையில் இருபுறம் நிறுத்தப்படும் வாகனங்களை காவல் துறையினர் வேறு இடத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் . அதேபோல், பொதுமக்களிடமும் சுற்றுலா பயணிகளிலும் சண்டையிடும் வாகன ஓட்டிகளை எச்சரித்து, பெருமாள் மலை, பழனி சாலையை போக்குவரத்து இடையூறு இல்லாமல் சென்று வருவதற்கு காவல்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.