ஈரோடு சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம் தீவிர விசாரணை…

ஈரோடு சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம் தொடர்பாக தொடர்புடைய  தனியார் ஆஸ்பத்திரிகளில்  மருத்துவ குழுவினர் இன்று இரண்டாம் நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு  சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு தனியார் மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பி ஆஸ்பத்திரி நிர்வாகிகள், டாக்டர்கள் ஊழியர்களிடம் காவல் துறை யினர் விசாரணை நடத்தினர். வளர்ப்புத் தந்தை தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்தும், எந்தெந்த ஆஸ்பத்திரிகளில் தனது கருமுட்டை எந்தெந்த நாட்களில் எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரத்தையும் சிறுமி விரிவாகக் கூறிய சம்பவம் மட்டுமில்லாமல் சிறுமி கருமுட்டை வெளிமாநில மருத்துவமனைகளிலும் எடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரத்தில் அவரது தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, அவர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த சூரம்பட்டி, பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ஜான் ஆகிய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். ஈரோடு ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு தனியார் மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பி ஆஸ்பத்திரி நிர்வாகிகள், டாக்டர்கள் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். இந்நிலையில் இந்த சம்பவத்தில் உண்மை நிலையை கண்டறியும் வகையில் சென்னை மருத்துவ பணிகள் இயக்குனரகத்தின் துணை இயக்குனர் குருநாதன், இணை இயக்குனர் (சட்டம்) விசுவநாதன், ஈரோடு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கோமதி, டாக்டர்கள் மலர்விழி, கதிரவன் உள்பட 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

நேற்று மருத்துவ குழுவினர் ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அந்த மருத்துவக் குழுவிடம் கண்ணீர் மல்க கூறினார். அதில் தனது வளர்ப்புத் தந்தை தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்தும், எந்தெந்த ஆஸ்பத்திரிகளில் தனது கருமுட்டை எந்தெந்த நாட்களில் எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரத்தையும் சிறுமி விரிவாகக் கூறினார்.சிறுமியின் வாக்குமூலத்தை மருத்துவக்குழுவினர் பதிவு செய்து கொண்டனர்.

அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பி ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மதியம் 3 மணி அளவில் விசாரணைக்கு வந்தனர். தொடர்ந்து மருத்துவ குழுவினர் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர், ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கருமுட்டை தானம் எடுக்கும் முன்பு அரசு குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா? எந்த சான்றிதழ் அடிப்படையில் அந்த சிறுமியிடம் இருந்து கருமுட்டை தானம் எடுக்கப்பட்டது. அந்த சிறுமிக்கு திருமணம் ஆகி விட்டதை உறுதி செய்தீர்களா? உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டனர். மேலும் அந்த சிறுமி தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். 3 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 8 மணி வரை அதாவது 5 மணி நேரம் வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் விசாரணையை முடித்துக் கொண்டு வெளியேறினர்.

பெருந்துறைக்கு சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணையை தொடங்கினர். அங்கு 8.30 மணிக்கு விசாரணையை தொடங்கி அவர்கள் நள்ளிரவு 12.30 மணி வரை விசாரணையை மேற்கொண்டனர். அந்த மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்கள், ஊழியர்களிடம் சரமாரியாக கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். பின்னர் அந்த சிறுமி தொடர்பான ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து இன்று மருத்துவ குழுவினர் 2-வது நாளாக சேலத்திற்கு சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியின் கருமுட்டை எடுத்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்கின்றனர். தொடர்ந்து இன்னும் 2 நாட்கள் அந்த மருத்துவ குழுவினர் பல்வேறு மருத்துவமனையில் சென்று விசாரணையை மேற்ண்டு வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதுகுறித்து மருத்துவ பணிகள் இயக்குனரக இணை இயக்குனர் (சட்டம்) விஸ்வநாதன் இன்று கூறியதாவது,
இந்த விவகாரத்தில் ஈரோடு மட்டுமின்றி பிற ஊர்கள், மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளது. ஏனெனில் அங்கும் கருமுட்டை விற்பனை நடந்துள்ளது. முழுமையாக விசாரித்த பின்னரே முழு விவரம் வெளியே தெரியவரும். சிறுமி தற்போது நல்ல நிலையில் உள்ளார். முழுமையான விசாரணை முடிந்த பிறகு அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். சட்டவிரோதமாக கரு முட்டை விற்பனை நடந்து இருந்தால் மருத்துவமனை உரிமம் ரத்து செய்யப்படும். டாக்டர்கள் உடந்தையாக இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சிறுமியிடம் கருமுட்டைகள் பெற்ற விவகாரத்தில், சிறுமிக்கு 20 வயது என போலியாக ஆதார் அட்டை தயாரித்துக் கொடுத்த நபரை ஈரோடு காவல் துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பிரபல கருத்தரிப்பு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று கருமுட்டை தானம் செய்வது போல் நடித்து, பணத்திற்கு விற்பனை செய்த மாலதி மற்றும் சிறுமியின் தாய் சுமையா, சுமையாவின் இரண்டாவது கணவர் சையத்அலி ஆகிய 3 பேரை கடந்த சில தினங்களுக்கு முன் ஈரோடு சூரம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 4 ஆண்டுகளாக அவர்கள் கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. சிறுமி பருவமடைந்தது முதல் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று, ஒவ்வொரு முறையும் ரூ.20,000-க்கு கருமுட்டையை விற்பனை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

images 23 - 2026
bcf67bbad598faffd3c238c3aea67b95 - 2026
1707360 eroden - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories