குமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி…

Published:

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி இன்று தொடங்கியது.

கன்னியாகுமரி, பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் மண்டபமும், அதன் அருகே உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் உள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். திருவள்ளுவர் சிலை உப்பு காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.

கடந்த 2017-ம் ஆண்டு இந்த ரசாயன கலவை பூசப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு ரசாயனக் கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பணிகள் நடைபெறவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு ரசாயன கலவை பூச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, திருவள்ளூவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளதால்  இந்த பணிகள் முடியும் வரை சுமார் 5 மாதங்கள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடி செலவில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசப்படுகிறது.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!
723657 chennai 08 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img