16546733222888 - 2026

சிதம்பரம் கோவிலில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க பொது தீட்சிதர்கள் மறுப்பு..

சற்றுமுன்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று ஆய்வுக்கு சென்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க பொது தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
2வது நாளாக இன்று ஆய்வுக்கு சென்ற போது, கோவில் செயலாளர் அலுவலக சாவி இல்லை எனக்கூறினர். இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதன் பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் கூறியதாவது,
சிதம்பரம் நடராஜர் கோயிலில், கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்ய முயற்சி செய்தோம். ஆனால், தேவையான ஆவணங்களை வழங்க தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர். தேவையான ஆவணங்களையும் அளிக்கவில்லை. இது தொடர்பாக ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் அறிக்கை அளிப்போம். தொடர்ந்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

16546733222888 - 2026
chidambaram temple - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.