மண் காப்போம்- இயக்கத்துக்கு உ.பி.யில் உள்ள.25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
மண்வளத்தை மீட்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, ‘மண் காப்போம்’ இயக்கத்தை துவங்கி, 100 நாள் பைக்கில், 30 ஆயிரம் கி.மீ., பயணம் மேற்கொண்டு வருகிறார்.பல நாடுகளை கடந்து வந்த நிலையில், தற்போது, இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் வழியாகவும் பயணித்து வருகிறார்.
உ.பி., மாநிலம், லக்னோவில் ் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு முன்னிலையில், மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
சத்குரு பேசுகையில் மண்வளத்தை மீட்டெடுக்கும் முயற்சியில், உலகிற்கு முன்னோடியாக இந்தியா தலைமை வகிக்க வேண்டும் என்றார்.
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், சத்குரு, நதிகளை மீட்போம்.இயக்கத்துக்காக கடந்த முறை உ.பி.வந்த பின் நாங்கள் 60 நதிகளுக்கு புத்துயிரூட்டும் பணிகளை செய்து வருகிறோம். கங்கை நதியை துாய்மையாக வைத்துக்கொள்ள நமாமி கங்கா திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மண் காப்போம் இயக்கத்துக்கு உ.பி.யிலுள்ள 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஆதரவு அளிப்பர் என்றார்.





