To Read it in other Indian languages…

Home சற்றுமுன் குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

ஜூன்25 முதல் ஜூன் 29ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜுன் 30-ல் நடைபெறும். மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி ஜுலை 2.

,ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர், இந்திய குடிமகனாகவும், 35 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும் என்பது விதி. மக்கள்தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மதிப்பு வேறுபடும். ஒரு எம்.பி வாக்கு மதிப்பு 700 ஆக நிர்ணயம். ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் ஒரு தமிழக எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 176 ஆகும். நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும், நாட்டின் அனைத்து சட்டமன்றங்களிலும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்

குடியரசுத் தலைவர் தேர்தலில் 4,809 பேர் வாக்காளர்களாக உள்ளனர் .776 எம்.பி.க்கள் மற்றும் 4,033 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள்.776 எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு 5,43,700.4,033 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு 5,43,231 ஆகும் என இந்திய தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − sixteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.