விருதுநகர் அருகே இரட்டை கொலை..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

விருதுநகர் அருகே தடங்கம் கிராமத்தில் கண்மாய் அருகில் இருவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் அருகேயுள்ள தடங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தன குமார் (23) கட்டிட தொழிலாளியாவார்.
மணிகண்டன் (17) இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துள்ளார்.

இவர்கள் இரண்டு பேரையும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் சிலர் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை.

images 72 - 2026

இறந்த நபர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்த வந்துள்ளது இவர்களின் சடலம் அருகே இருந்த மது பாட்டில்கள் மூலம் தெரியவந்துள்ளது.வேறு யாரேனும் அவர்களுடன் சேர்ந்து மது அருந்த வந்திருக்கலாம் என்றும் குடிபோதையில் நடந்த தகராறு காரணமாக இக் கொலைகள் நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும்,
வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச் கொலைச் சம்பவம் குறித்து
வச்சக்காரபட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Related articles

Recent articles

spot_img