ஆந்திரா-குளத்தில் நீச்சல் அடிக்க சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி..

ஆந்திர பிரதேசத்தில் குளத்தில் நீச்சல் அடிக்க சென்ற 6 மாணவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விசாகப்பட்டினம், ஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் மாணவர்கள் 6 பேர் அருகேயிருந்த குளத்தில் நீச்சல் அடிப்பதற்காக ஒன்றாக சென்றுள்ளனர். கோடை வெயிலில், குளுமையான சூழலில் குளத்தில் இறங்கிய அவர்களில் சிலருக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. குளத்தில் குதித்த மாணவர்களில் சிலர் நீரின் ஆழத்திற்கு சென்றுள்ளனர்.

நீச்சல் தெரியாத நிலையில் அவர்கள் சிக்கி கொண்டனர். இதனால் தங்களை காப்பாற்றும்படி உதவி கேட்டு அவர்கள் அலறியுள்ளனர். அவர்களது சத்தம் கேட்டு நீச்சல் பயிற்சி பெற்ற சிலர் குளத்திற்குள் குதித்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில், 2 மாணவர்களை உயிருடன் மீட்டுள்ளனர். எனினும், 4 மாணவர்களை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டனர்.

இதன்பின்னர், அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவர்கள் சிந்தலா கவுசிக், முன்னாங்கி சிவாஜி, மட்டினேனி சுப்ரமணியம் மற்றும் அப்புரி ஹரி என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். நீச்சல் அடிக்க சென்று குளத்தில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகம் ஏற்படுத்தி உள்ளது.

images 10 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories