தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தென்காசி ஆட்சியர் இடமாற்றம் ..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்றை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால், தமிழக சுகாதாரத் துறையின் புதிய செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்குமர் நியமிக்கப்பட்டுள்ளார். வருவய் நிர்வாக ஆணையராக அல்லது கூடுதல் தலைமைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் தாரேஷ் அகமது -ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிஷனராகவும்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர் ஜெயகாந்தன்- புவியியல் மற்றும் கனிம வளத்துறை கமிஷனராகவும்,புவியியல் மற்றும் கனிம வளத்துறை இயக்குநர் நிர்மல் ராஜ் – போக்குவரத்து துறை கமிஷனராகவும்,வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மற்றும் மறுகுடியமர்த்தல் துறை செயலாளர் ஜெசிந்தா லசாரஸ்- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனராகவும்,தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர ராஜ்-வணிகவரித்துறை இணை கமிஷனராகவும் ,தமிழக சிவில் சப்ளை கார்பரேசன் இணை மேலாண் இயக்குநர் சங்கீதா- வணிக வரித்துறை நிர்வாக கூடுதல் கமிஷனராகவும்,திருச்சி கலெக்டர் சிவராசு-கோவை, வணிகவரித்துறை இணை கமிஷனராகவும்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர்த்துறை கமிஷனர் மதிவாணன்-மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கமிஷனராகவும்,மரியம் பல்லவி பல்தேவ்- தொழிற்சாலைகள் துறை கூடுதல் செயலாளராகவும்

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

மின்னணு நிர்வாகத்துறை இயக்குநர் விஜயேந்திர பாண்டியன்- கருவூலம் மற்றும் அக்கவுண்ட் துறை கமிஷனராகவும்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லாவ்லீனா- உணவுபாதுகாப்பு துறை கமிஷனராகவும்,ராமநாதபுரம் முன்னாள் கலெக்டர் சந்திரகலா- தொழில் முதலீடு கழக இயக்குநராகவும்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை இணை செயலர் ஜான் லூயிஸ்- வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இணை கமிஷனராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.

அருங்காட்சியக துறை இயக்குநர் ராமன்- வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை இயக்குநராகவும்
,தட்கோ மேலாண் இயக்குநர் விவேகானந்தன்- மாநில தேர்தல் ஆணைய செயலாளராகவும்
,சென்னை முன்னாள் கலெக்டர் விஜயராணி- சேலம் பட்டுநூல் வளர்ப்பு கழக இயக்குநராகவும்,
பால் உற்பத்தி மற்றும் பால் வளர்ச்சி கழக கமிஷனர் பிரகாஷ்- வரலாறு மற்றும் காப்பகங்கள் கமிஷனராகவும்,ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்பு செயலாளர் பிங்கி ஜோயல்- பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனராகவும்,
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனர் கருணாகரன்- ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்பு செயலாளராகவும்,
கருவூலத்துறை கமிஷனர் வெங்கடேஷ்- போக்குவரத்து துறை சிறப்பு செயலாளராகவும்
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இணை கமிஷனர் சீதா லெட்சுமி- சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றத்துறை இணை செயலாளராகவும்

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநர் பிரவீன் நாயர்- மின்னணு நிர்வாகத்துறை இயக்குநராகவும்,தமிழக பாட புத்தகம் மற்றும் கல்வி சேவை கழக மேலாண் இயக்குநர் மணிகண்டன்- பள்ளிகல்வித்துறை இணை செயலாளராகவும்,
வரலாறு மற்றும் காப்பகங்கள் துறை முதன்மை கமிஷனர் ஹர்சகாய் மீனா – திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சிறப்பு செலயாளராகவும்
சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை துணை கமிஷனர் நரனவாரே மணிஷ் ஷங்கர்ராவ்- ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநராகவும் மாற்றம்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

தமிழக குடிநர் சப்ளை மற்றும் கழிவுநீர்வாரிய இணை மேலாண் இயக்குநர் பிரதீப்குமார்- திருச்சி கலெக்டராகவும்
சேலம், பட்டுநூல் வளர்ச்சித்துறை இயக்குநர் சாந்தி- தர்மபுரி கலெக்டராகவும்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ்- ராமநாதபுரம் கலெக்டராகவும்
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணைய கமிஷனர் சித்திக்- சென்னை மெட்ரோ ரயில் கழக முதன்மை செயலாளர் மற்றும் மேலாண் இயக்குநராகவும்

சென்னை மெட்ரோபோலிட்டன் குடிநீர் சப்ளை மற்றும் கழிவுநீர் வாரிய முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆகாஷ்- தென்காசி கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த உத்தரவில் தலைமை செயலாளர் இறையன்பு கூறியுள்ளார்.

radhakrishnan ias - 2026

Related articles

Recent articles

spot_img