ராகுல்காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

மத்திய அரசுக்கு எதிரான தொண்டர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், சகோதரியும் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வதேராவுடன் ராகுல் காந்தி விசாரணை அலுவலகத்திற்கு சென்றார்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை சோனியாகாந்தி, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கத்துறை முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி இன்று ஆஜராக உள்ளார். இந்தநிலையில், கோழைத்தனமான மோடி அரசு, டெல்லியில் பல போலீஸ் தடைகளையும், போலீஸ் அதிகாரிகளையும் நிலைநிறுத்தி, அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை விதித்துள்ளது. மோடி அரசை காங்கிரசால் அசைக்கப்பட்டுள்ளது என்பதை இது நிரூபிக்கிறது. அரசியலிமைப்பின் பாதுகாவலர்களான நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். ராகுல்காந்தி தலைமையில் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரசார் அமைதியாக பேரணி செல்வர் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விசாரணை நடைபெறுவதாகவும், ஆளும் கட்சி மத்திய அமைப்புகளை சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. நாடு முழுவதும் அமலாக்கதுறை அலுவலகம் முன்பு சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அந்த வகையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முதல் அமலாக்கத்துறை அலுவலகம் வரை சத்தியாகிரக பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இதில், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரிகள் காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று உள்ளனர். இந்நிலையில், இந்த பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. பேரணியால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தினால் அனுமதி மறுக்கப்படுவதாக போராட்ட ஒருங்கிணைப்பு குழுவுக்கு டெல்லி காவல்துறை இணை ஆணையர் அம்ருத்தா குகுலோத் கடிதம் அனுப்பியுள்ளார். எனினும், திட்டமிட்டபடி இன்று காலை சத்தியாகிரக பேரணி நடத்தப்படும் என்றும் கட்சியினர் அனைவரும் தலைமை அலுவலகத்துக்கு வரும்படியும் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுப்பட்டது.

தடையை மீறி ஏராளமானோர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், திக்விஜய சிங், ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், முகுல் வாஸ்னிக், கவுரவ் கோகோய், ராஜீவ் சுக்லா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்க வந்த ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றார் இதனையடுத்து தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய அரசுக்கு எதிரான தொண்டர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வதேராவுடன் ராகுல் காந்தி விசாரணை அலுவலகத்திற்குச் சென்றார். ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் தெருவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் மற்றும் அசாமின் கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திக் வருகின்றனர். துணை இயக்குனர் அந்தஸ்தில் உள்ள் அதிகாரி முன்னிலையில் உதவி இயக்குனர் அந்தஸ்திலான அதிகாரிகளும் கேள்விகளை கேட்டு வருகின்றனர். ராகுல்காந்தியிடம் 5 அல்லது 6 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசாரணைக்கு முன்பு சொல்வதெல்லாம் உண்மை என்று ராகுல்காந்தி உறுதி மொழி எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

500x300 731084 rahulganathi005 - 2026

Related articles

Recent articles

spot_img