திருப்பதியில் மாநகராட்சி ஊழியர்கள் இருவர் விஷவாயு தாக்கி பலி..

திருப்பதியில் மாநகராட்சி ஊழியர்கள் இருவர் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கி பலியாகியுள்ளனர்.திருப்பதி மாநகராட்சி என்ஜினியர்கள் 2 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருப்பதி வைகுண்டபுரம், தும்மலகுண்டா சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவதாக அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சிக்கு புகார் செய்தனர். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் ஆறுமுகம் (வயது 22), மகேஷ் (35) ஆகியோர் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் ஜெட் வாகனத்தை அப்பகுதிக்கு கொண்டு சென்றனர். பாதாள சாக்கடையில் குழாயை செலுத்தி அடைப்பை அகற்ற முயன்றனர். ஆனால் வாகனத்தின் மூலம் அடைப்பை அகற்ற முடியவில்லை. இதையடுத்து மகேஷ் பாதாள சாக்கடைக்குள் இறங்கி அடைப்பை அகற்ற முயன்றார். பாதாள சாக்கடைக்குள் இறங்கிய மகேஷ் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆறுமுகம் பாதாள சாக்கடைக்குள் இறங்கினார். அவரும் வெளியே வரவில்லை. இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் லட்சன்னா(22) என்பவரும் பாதாள சாக்கடைக்குள் இறங்கியபோது விஷவாயு அவரையும் தாக்கியது. சுதாரித்துக்கொண்ட லட்சன்னா மூச்சை பிடித்துக்கொண்டு மேலே வந்து கத்தி கூச்சலிட்டார். அருகிலிருந்தவர்கள் லட்சன்னாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் .

அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாதாள சாக்கடையில் இறங்கி பார்த்தபோது அங்கு விஷ வாயு தாக்கி மகேஷ், ஆறுமுகம் இறந்து கிடந்தனர். 2 பேர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக திருப்பதி மாநகராட்சி என்ஜினியர்கள் 2 பேர் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

images 5 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories