மகாராஷ்டிரா 4,165 , கேரளா 3,162 இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா..

Published:

மகாராஷ்டிரா, கேரளாவை தொடர்ந்து பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 4,165 பேர், கேரளாவில் 3,162 பேர் அடங்குவர். டெல்லியில் நேற்று முன்தினம் 1,322 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் பாதிப்பு 35 சதவீதம் உயர்ந்து 1,797 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரியானாவில் 689, கர்நாடகாவில் 634, தமிழ்நாட்டில் 589, உத்தரபிரதேசத்தில் 461, மேற்கு வங்கத்தில் 295, தெலுங்கானாவில் 279, குஜராத்தில் 225, சத்தீஷ்கரில் 153, கோவாவில் 128, பஞ்சாபில் 109 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் மொத்த பாதிப்பு 4 கோடியே 32 லட்சத்து 83 ஆயிரத்து 793 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மீட்பு சிகிச்சையில் இருந்த 8,148 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 90 ஆயிரத்து 845 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 68,108 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 5,045 அதிகம் ஆகும். தொற்று பாதிப்பால் கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 13 மரணங்கள், நேற்று மகாராஷ்டிராவில் 3, கர்நாடகாவில் 2, டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மேகாலயாவில் தலா ஒருவர் என மேலும் 23 பேர் இறந்துள்ளர். இதுதொற்று பலியானோர் எண்ணிக்கை 5,24,840 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 196 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 14,99,824 டோஸ்கள் அடங்கும். இதற்கிடையே நேற்று 4,84,924 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 85.73 கோடியாக உயர்ந்துள்ளது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!
images 21 1 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img