சீர்காழி அருகே காரைக்காலில் இருந்து இரண்டு கார்களில் புதுச்சேரி மாநில மதுபானம் கடத்தல். மத்திய புலனாய்வு பிரிவு மற்றும் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கையின் போது ரூ.3 லட்சம் மதிப்பிலான 2400 மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ15 லட்சம் மதிப்பிலான 2 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து 6 பேரை கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடக்குடி வடபாதி பகுதியில் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து வந்த 2 கார்களை போலீசார் நிறுத்தி சோதனையிட முயன்றனர். போலீசாரை பார்த்ததும் கார்கள் வேகமாக செல்ல முயன்றது. சுதாகரித்த போலீசார் தடுப்பு அமைத்து கார்களை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அதில் புதுச்சேரி மாநில மதுபானங்கள் 50 அட்டை பெட்டிகளில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 2400 பாட்டில்கள் இருந்தன. மதுபான பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ரூ 15 லட்சம் மதிப்பு கொண்ட 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார், மதுபானம் கடத்தி வந்த காரைக்கால் பகுதியை சேர்ந்த ரகு, கௌதம், மோகன்ராஜ், கிருஷ்ணகுமார். சோமுராஜ், சண்முகம் ஆகிய 6 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் காரைக்காலில் இருந்து மணல்மேடு கடலங்குடி பகுதிக்கு மதுபானம் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது
