பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு நன்றிதெரிவித்த ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்க உள்ள சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டே பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ் மகாராஷ்டிர மாநில முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக, ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே இன்று இரவு 7.30 மணியளவில் பதவியேற்பார் என்று ஃபட்னவீஸ் அறிவித்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற பிறகு, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். சிவசேனை மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.முன்னதாக, ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸும், சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

மகாராஷ்டிர மாநிலத்தில், முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மீண்டும் சிவசேனை ஆட்சி அமையவிருக்கிறது. இந்த அரசுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து வரும் ஏக்நாத் ஷிண்டே “சிவசேனையைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் உள்பட மொத்தம் 50 எம்எல்ஏக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். அவர்கள் உதவியால்தான் இந்தப் போரில் ஈடுபட்டோம். இந்த 50 பேரும் என் மீது வைத்த நம்பிக்கையை ஒரு துளி கூட சிதைக்க விடமாட்டேன். பாஜகவுக்கு 120 எம்எல்ஏக்கள் இருந்தாலும், தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வர் பதவியை ஏற்காமல் தாராள மனப்பான்மையுடன் பாலாசாகேப்பின் ஊழியனான என்னை முதல்வராக்கியுள்ளார். அவருக்கும் பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் பிற பாஜக தலைவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

- 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories