- திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில்
- 418 ஆண்டுகளுக்கு பிறகு நாளை புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
- காலை 6 மணி முதல் 6.50 மணி வரையிலான நேரத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு நாளை புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி கடந்த 29-ந் தேதி முதல் கும்பாபிஷேக பூஜை நடந்து வருகிறது.
காலையில் தங்கமுலாம் பூசப்பட்ட செம்பு கவசங்கள் கோவிலை சுற்றி கொண்டு வரப்பட்டு கொடிமரத்தின் அருகில் வைக்கப்பட்டது. திருநெல்வேலி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜான்சிராணி செம்பு கவசங்களை டிஜிட்டல் தராசில் எடை போட்ட பின்னர் கொடி மரத்தில் பொருத்துவதற்கு உத்தரவு பிறப்பித்தார்.
அதன் பிறகு ஸ்தபதி பாபு தலைமையில் கொடி மரத்தில் கவசங்கள் பொருத்துவதற்கான ஏற்பாடு நடந்தது. மேலும் ஒற்றைக்கல் மண்டபத்தில் பூஜைக்கு பிறகு கும்ப கலசங்களில் தானியங்களை உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் நிறைத்தனர். பின்னர் மாலையில் கோவில் விமானத்தில் கும்ப கலசங்கள் பொருத்தப்பட்டது. தொடர்ந்து வேளுக்குடி கிருஷ்ணன் சாமிகளின் ஆன்மிக உரை, காணிமடம் குழுவினரின் நர்த்தன ரம்மிய பஜனையும் நடந்தது.
கும்பாபிஷேக நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதனையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு கணபதி ஹோமம், பிரசாத பிரதிஷ்டை, சித்பிம்ப சம்மேளனம், உச்ச பூஜை, பிரதிஷ்டை, தட்சிணா நமஸ்காரம், பஞ்சவாத்தியம் நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் 6.50 மணி வரையிலான நேரத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக நிகழ்ச்சியை அம்பலக்கடை புலவர் ரவீந்திரன், வெள்ளாங்கோடு அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மீனாம்பிகா ஆகியோர் வர்ணனை செய்கின்றனர். தொடர்ந்து 7 மணிக்கு இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. 8 மணிக்கு துவாபர யுகத்தின் சிறப்பு என்னும் தலைப்பில் பரத நாட்டியமும், 9 மணிக்கு திருக்கோவிலூர் ஜீவ.சீனுவாசன் வழங்கும் ஞான அமுது தேனிசையும், மாலை 5 மணிக்கு குளச்சல் சிவசங்கரின் கும்பாபிஷேக மகிமை ஆன்மிக சொற்பொழிவும், இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும் நடைபெறுகிறது.
108 வைணவத்திருப்ப திகளில் ஒன்றானதும் நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பட்ட திருத்தலமும் ஆகிய திருவட்டார் ஆதிகே சவப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் 450 ஆண்டுகளுக்குப்பின்னர் நாளை ஜூலை மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் மூலவர் சிலை புதுப்பிக்கும் பணி, மீயூரல் ஓவியங்கள் சீரமைக்கும் பணி, மட ப்பள்ளி சீரமைப்பு ஆகியன கோவில் பிரகாரத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணி முடிவடைந்து விட்டது.
பிரகாரங்களில் வர்ணம் பூசும்பணி கோவில் கருவறையின் மேல்பகுதி விமானம் சுத்தப்படுத்தி அதன் மீது அஷ்டபந்தன காவி பூசும் பணி சுற்றுப்புற சுவர் காவி மற்றும் வெள்ளை வ ர்ணம் பூசப்பட்டு கோவில் உள் பகுதி மற்றும் வெளிப்பகுதியில் கும்பாபிஷேகத்தை யொட்டி விளக்குகள் பொருத்தப்பட்டு நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
ஜூன் 29-ந்தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் ஆரம்பமானது. ஜூன் 30-ந்தேதி பாலாலயத்தில் பூஜையில் இருக்கும் அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் கருவறைக்கு ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் எடுத்துச்செல்லப்பட்டது. நாளை ஜூலை மாதம் 6-ந்தேதி காலை 5.10 முதல் 5.50 மணி வரை ஜீவகலச அபிஷேகம், காலை 6.00 மணி முதல் 6.50க்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறும்.
மேலும் குலசேகரப்பெருமாள் கோவில், திருவம்பாடி கிருஷ்ணசாமி சன்னதி, தர்மசாஸ்தா சன்னதியிலும் கும்பாபிஷேகம் நடைபெறும். ஜூலை 9-ந்தேதி தங்கக்கொடிமர பிரதிஷ்டை நடைபெறும். கோவிலில் 5 இடங்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியலும், 6 குடங்களும் திறக்கப்பட்டு. அதிலிருந்த பணம் எண்ணப்பட்டது.