December 9, 2024, 10:02 AM
27.1 C
Chennai

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு..

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் வழக்கை உயர்நீதிமன்றம் நாளை ஒத்திவைத்தது.

வரும் 11ம் தேதி நடத்தப்பட உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த பிரச்னையில் நிவாரணம் தேவைப்பட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதியை நாடலாம் என ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது. அதே நேரம், கடந்த மாதம் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் தடை விதித்துள்ளது. ஜூலை 11ல் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜூலையில் அதிமுக பொதுக்குழு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதே? உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் நான் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், தனி நீதிபதியை அணுகலாம் என கூறியுள்ளது. தற்போது பொதுக்குழு கூட்டியது செல்லாது என வழக்கு தொடர்ந்துள்ளதாக அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. கட்சி உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியதை சுட்டிக்காட்டி எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும் பொதுக்குழு வழக்கில் பதிலளிக்க 2 வாரம் காலம் அவகாசம் வேண்டும். தடை கோரிய மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளதால் மீண்டும் அதே கோரிக்கையை எழுப்ப முடியாது. எனவும் வாதிட்டார்.
பொதுக்குழுவுக்கு தடை கேட்பதை தவிர வேறு நிவாரணம் கேட்கலாமே? என கேள்வி எழுப்பினார்.

ALSO READ:  செங்கோட்டை: சூரசம்ஹார விழா கோலாகலம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

சட்டவிதிகளின் படி பொதுக்குழு நடத்தப்படவில்லை என்பது தான் எங்களின் வழக்கு. ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் செல்லுமா என்பது தான் இந்த வழக்கு. ஜூலை 23ம் தேதி கூட்டத்தில் பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டாலும் இரு தினங்களுக்கு முன்னர் தான் நோட்டீஸ் தரப்பட்டது. நோட்டீஸ் கிடைக்கப் பெற்றவுடன் வழக்கு தொடரப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது.

கடந்த 23ம் தேதி நடைபெற்ற கூட்டத்தின் நீட்சிதான் வரும் 11ம் தேதி பொதுக்குழுவா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

கடந்த 23ம் தேதி நடைபெற்ற கூட்டம் வேறு; வரும் 11ம் தேதி நடைபெற உள்ள கூட்டம் வேறு. பொதுக்குழுவுக்கு தலைமை நிலைய செயலாளர் அழைப்பு விடுக்கிறார். 23ல் நடந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி குறித்து விவாதிக்கப்படவே இல்லை.  ஆனால் அப்படி ஒரு அமைப்பே அதிமுகவில் இல்லை. ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு அங்கீகாரம் அளிக்கப்படாததால் அவர்கள் செயல்படாத நிலை உள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது.

நீதிமன்றத்தில் அளித்த தீர்மானங்களும், பொதுக்குழுவில் வைக்கப்பட்ட தீர்மானங்களும் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன. அதிமுக கட்சி விதிகளின் படி பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம். 15 நாட்களுக்கு முன்பாக பொதுக்குழு தொடர்பான அறிவிப்பு கிடைக்க வேண்டும் என்ற விதியும் மீறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாக இருந்த பொதுக்குழுவை கூட்டலாம் என்ற விதியை பயன்படுத்த முயற்சிக்கின்றனர் என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

ALSO READ:  IND Vs BAN Test: இரண்டாவது டெஸ்டையும் வென்று இந்திய அணி அசத்தல்!

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் இல்லாத போது யார் பொதுக்குழு கூட்ட அதிகாரம் படைத்தவர்? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படாவிட்டால் கட்சி செயலடாதா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்யவே இந்த பொதுக்குழுவை கூட்டுகின்றனர். ஒருங்கிணைப்பாளர்கள் பதவி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வானதற்கான வெற்றி படிவம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர். வரும் 2026ம் ஆண்டு வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒருவரும் பதவிக்காலம் உள்ளது.

2026 வரை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உள்ள நிலையில் அனைத்து விதிகளையும் புறந்தள்ளி உள்ளனர். ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலியாக இருந்தால் பொதுக்குழுவை கூட்டலாம் என்ற விதியை பயன்படுத்த முயற்சிக்கின்றனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அதிமுகவில் தற்போதைய நிலையே தொடர உத்தரவு பிறப்பிக்க ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தினார்.  

உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள நிலையில் பொதுக்குழுவை தடுக்கும் நோக்கில் வேண்டுமென்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து தற்காலிக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் உள்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். வரும் 11ம் தேதி நடைபெற இருப்பது அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டம்; கடந்த பொதுக்குழுவில் நீட்சி அல்ல.

ALSO READ:  செங்கோட்டையில் தாயின் மடியில் அறக்கட்டளை முதியோர்களுக்கு புத்தாடை வழங்கல்!

ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த போது தலைமை கழக நிர்வாகிகள் பெயரிலேயே அழைப்பு விடுக்கப்பட்டது. பொதுக்குழுவுக்கு தடையில்ல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பு தடை கோருகிறது. இன்றைய நிலையில் அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ இல்லை. கட்சி விதிகளை திருத்தும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு தான் உள்ளது. என எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டனவா? அதிமுக பொதுக்குழுவை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? பொதுக்குழு நோட்டீஸில் கையெழுத்திடுவது யார்? என கேள்வி எழுப்பிய நீதிபதி; அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரும் வழக்கில் எடப்பாடி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

ஓ.பன்னிர்செல்வம் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று எடப்பாடி தரப்பு வாதம் செய்தது.

அதிமுக்கு பொதுக்குழுவுக்கு தடை கோரும் வழக்கில் 2.30 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற வாதங்கள் நிறைவு பெற்றது. ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

VideosCovid 19

author avatar
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week