ராகுல் வெளிநாடு பயணம்-காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி..

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று ஐரோப்பாவுக்கு புறப்பட்டு சென்றார். வருகிற 17-ந்தேதி அவர் நாடு திரும்புகிறார் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் நிலவும் அரசியல் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே ராகுல்காந்தி வெளிநாடு சென்றிருப்பதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் அவர் ஓட்டு போட திரும்பி வருவார் என்றும், பாராளுமன்ற கூட்டத் தொடரில் அவர் பங்கேற்பார் என்றும் கட்சி நிர்வாகிகள் கூறி உள்ளனர். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மேலும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற உள்ள “பாரத் ஜோடோ யாத்திரை” தொடர்பாகவும் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. மேலும் கோவாவில் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மாயமாகி திரும்பிய விவகாரத்தில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

இந்த பிரச்சினைகளுக்கிடையே ராகுல்காந்தி வெளிநாடு சென்றிருப்பதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கட்சியை எப்படி வளர்ப்பது என்றும் அவர்கள் முணுமுணுக்கிறார்கள்.

கட்சியில் பிரச்சினைகள் இருக்கும் போது ராகுல் காந்தி வெளிநாடுகளுக்கு பயணம் செய்ததை இதுவரை பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே விமர்சித்து வந்தன. ஆனால் தற்போது சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனாலும் அவர் எதற்கும் கவலைப்படாமல் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் அவர் கடந்த மே மாதம் நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இரவு விடுதியில் பொழுதை போக்கியது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.

5 மாநில தேர்தலின் போது மற்ற கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலிக்கு சென்ற ராகுல்காந்தி கடந்த ஜனவரி மாதம் தான் நாடு திரும்பினார். மேலும் கடந்த மே மாதம் மேல்சபை தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அணி மாறி ஓட்டு போட்ட பிரச்சினை இருந்த நிலையில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்-க்கு ராகுல்காந்தி பயணம் மேற்கொண்டார்.

இப்படி காங்கிரஸ் கட்சியில் முக்கிய விவகாரங்கள், பிரச்சினைகள் இருக்கும் போதெல்லாம் அவர் வெளிநாடு செல்வது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

images 77 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories