மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கு உழைப்பேன் -இபிஎஸ் சபதம்..

இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி என்றும், ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய கடுமையாக உழைப்பேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் நாடி நரம்புகளான, ரத்தத்தின் ரத்தமான, ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் எனது இதயமார்ந்த நன்றியை தெரிவித்து, வணங்குகிறேன். பொன்விழா ஆண்டில் வீறுநடை போடும் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக கடந்த 11-ந்தேதி நடந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் என்னை தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களில் ஒருவனாக கிளை செயலாளர் பொறுப்பில் தொடங்கி, 48 ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வரும் என்னை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு பின், இந்த மாபெரும் இயக்கத்துக்கு தலைமை தாங்கி வழிநடத்தும்படி பணித்த உங்கள் அனைவரின் அன்பிற்கு நன்றி தெரிவிப்பதோடு, நீங்கள் இடும் கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளேன். வெற்றி பாதை இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் சாதிக்க முடியாத பல அரிய சாதனைகளை புரிந்து, பல்வேறு வெற்றிகளையும், விருதுகளையும் பெற்று, பெருமைமிகு மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய பெருமை அ.தி.மு.க.வையே சாரும். தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆற்றிய அரும்பணிகள், எடுத்த துணிச்சலான முடிவுகள், உன்னதமான மக்கள் நலப்பணிகள் ஆகிய அனைத்தும் தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நம் இருபெரும் தலைவர்கள் அமைத்துதந்த பாதையில், இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு வெற்றி பாதையில் அழைத்து செல்வேன் என்ற உறுதியை அளிக்கிறேன்.

மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கும், கட்சியினரின் மேன்மைக்கும், தமிழக மக்களின் நல்வாழ்வுக்கும், சாதி-மத பேதமின்றி, விருப்பு-வெறுப்புகளுக்கு இடமின்றி என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்காகவே உழைப்பேன் என்று மனதார உறுதி கூறுகிறேன். ”எனக்கு பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்” என்று முதல்-அமைச்சராக, சட்டமன்றத்தில் ஜெயலலிதா ஆற்றிய சிங்க கர்ஜனை உரை நம் செவிகளில் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஜெயலலிதாவின் எண்ண ஓட்டத்தை நினைவாக்கும் வகையில், மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்திட கடுமையாக உழைப்பேன், உழைப்பேன். இதுவே எனது லட்சியம். இந்த லட்சியத்துக்கு நீங்கள் அனைவரும் துணை நிற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, தமிழகத்தின் தீய சக்திகளை வேரோடு ஒழித்து, வெகு விரைவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியோடு, அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர்வதற்கு பொன்விழா ஆண்டில் சபதம் ஏற்போம் என கூறியுள்ளார்.

images 32 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories