குற்றாலம் திற்பரப்பு பாலருவில் சுற்றுலா பயணிகள் கூட்டம்..

இன்று ஆடி முதல்நாள் விடுமுறை தினம் சபரிமலை நடைதிறப்பு என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக அதிகளவில் இருந்தது. அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. தினமும் சாரல் மழை விட்டு விட்டு பெய்கிறது. குளிர்ந்த காற்று வேகமாக வீசுகிறது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று முன்தினம் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் குவிந்தனர் இந்த நிலையில் நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததால் இந்த 2 அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. நேற்றும் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். இதுதவிர இன்று ஆடி முதல்நாள் சபரிமலை நடைதிறப்பு விடுமுறை நாள் மற்றும் கேரள மாநிலம் அருகில் இருப்பதால் அங்கிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்திருந்தனர். உற்சாக குளியல் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். ஆரியங்காவு பாலருவி அச்சன்கோயில் கும்பாருட்டி மணலாறு அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

குமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகக்குளியல் போட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் அதிக அளவில் வருகை தரும் சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவிக்கு இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு வாகனங்களில் வருகை தந்தனர். இவர்கள் ஆசை தீர அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதேபோன்று அருவியின் அருகிலுள்ள சிறுவர் பூங்க, அலங்கார நீரூற்று, பச்சைபசேல் புல்வெளி தோட்டம் ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். அருவியில்குளித்தும் நீச்சல் குளத்தில்நீந்தியும்பொழுது போக்கினர்.

அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் அப்பகுதியில் குளுகுளு சீசன் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். மேலும், இன்று ஆடி மாதம் பிறப்பு என்பதால் அருவியின் அருகிலுள்ள திற்பரப்பு மகாதேவர் ஆலயத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகாமாக இருந்தது. திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அடிக்கடி இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

775505 cort ok - 2026
776491 untitled 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories