சென்னை தலைமை செயலகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவக்கம் ..

778072 sun - 2026

மருத்துவமனையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவர் குடியரசு தலைவர் தேர்தலில் தனது வாக்கை பதிவுசெய்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ந்தேதியன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொண்டார். வீட்டு தனிமையில் இருந்தபோது மு.க.ஸ்டாலினுக்கு லேசான சளி மற்றும் இருமல் இருந்தது. இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் மு.க.ஸ்டாலின் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை அடிப்படையில், மு.க.ஸ்டாலின் கடந்த 14-ந்தேதியன்று காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேகமாக டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலையை 24 மணி நேரமும் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வந்தனர். இதனால் அவர் நல்ல முறையில் வேகமாக குணமடைந்தார்.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டே தனது அன்றாட அலுவல் பணிகளையும் கவனித்து வந்தார். இந்த சூழலில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பா.ஜ.க கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குசீட்டு முறையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை தலைமைச் செயலகம் அந்த வகையில் தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டசபை குழு கூட்ட அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து இன்று நடக்கும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள வாக்குப்பெட்டியில் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செலுத்தினார். அவரைத்தொடர்ந்து மாநில அமைச்சர்களும் வாக்களித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories