images 88 - 2026

ஹர் ஹார் ட்ரையாங்கா-பிரதமர் மோடி அழைப்பு..

சற்றுமுன்

இந்தியாவில் 75-வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நாட்டு மக்கள் அனைவரும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ‘அசாதி கா அம்ரித் மோட்சாவ்’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

அந்த நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி என்ற நிகழ்ச்சிக்கும் மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில், சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த ஆண்டு நாம் ‘அசாதி கா அம்ரித் மோட்சாவ்’ நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதை ஹர் ஹார் ட்ரையாங்கா ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி இயக்கம் மூலம் மேலும் வலுப்படுத்துவோம். ஆகஸ்ட் 13 முதல் 15 வரை உங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுங்கள். இந்த இயக்கம் தேசியக்கொடியுடனான நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும்’ என தெரிவித்துள்ளார்.

images 88 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.