68வது தேசிய விருதுகள் அறிவிப்பு – சிறந்த நடிகராக சூர்யா தேர்வு – தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த சூரரைப் போற்று மலையாள மொழியில் தேசிய விருதுகளை அள்ளிய அய்யப்பனும் கோஷியும்
கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. திரைப்பட தயாரிப்புக்கு சாதகமான சூழல் நிலவும் மாநிலமாக மத்திய பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்துறை தொடர்பான சிறந்த புத்தகமாக தி லாங்கஸ்ட் கிஸ் என்ற புத்தகத்துக்கு கிடைத்துள்ளது.
சிறந்த தெலுங்குப் படமாக கலர் போட்டோவும், சிறந்த தமிழ் படமாக சிவரஞ்சனியும் சில பெண்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த இசையமைப்பாளராக அல வைக்குந்தபுரமுலோ படத்துக்காக தமன் மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகைக்காக அபர்ணா பாலமுரளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்துக்காக ஸ்ரீகர் பிரசாத் பெற்றார். சிறந்த தமிழ் படமாக சூரரைப் போற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த துணை நடிகையாக லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த வசனத்துக்காக மண்டேலா படத்துக்காக மடோனா அஸ்வினுக்கு கிடைத்துள்ளது.
சிறந்த சண்டைப் படமாக மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த பொழுதுபோக்கு படமாக ஹிந்தியில் வெளியான தன்ஹாஜி படம் பெற்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதை தன்ஹாஜி படத்துக்காக அஜய் தேவ்கனும் பெறுகிறார். சிறந்த பின்னணி பாடகிக்கான விருது அய்யப்பனும் கோஷியும் படத்துக்காக நஞ்சம்மா பெறுகிறார். சிறந்த இயக்குநராக அய்யப்பனும் கோஷியும் படத்துக்காக சச்சிதானந்தன் கே.ஆர் பெறுகிறார். சிறந்த துணை நடிகராக அய்யப்பனும் கோஷியும் பிஜு மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய விருதுகளை அள்ளிய அய்யப்பனும் கோஷியும்
மறைந்த இயக்குநர் சச்சி இயக்கிய அய்யப்பனும் கோஷியும் என்கிற மலையாளப் படத்துக்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
2020-ம் வருடம் பிப்ரவரி மாதம் வெளியான மலையாளப் படமான அய்யப்பனும் கோஷியும் ஏராளமான ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. பிரிதிவிராஜ், பிஜு மேனன் நடிப்பில் சச்சி இயக்கிய படம் இது. ஆனால் அடுத்த ஐந்து மாதங்களில் இயக்குநர் சச்சி 48 வயதில் காலமானார். அய்யப்பனும் கோஷியும் போன்ற பல தரமான படங்களைத் தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவருடைய திடீர் மரணம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியது.
இந்நிலையில் திரைப்படத் தேசிய விருதுகளுக்கான அறிவிப்பு இன்று வெளியானது. சிறந்த இயக்குநராக அய்யப்பனும் கோஷியும் படத்துக்காக சச்சிக்கு அறிவிக்கப்பட்டது. மேலும் சிறந்த துணை நடிகருக்கான விருதை இப்படத்தில் நடித்த பிஜு மேனன் பெற்றுள்ளார்.
இதுதவிர மேலும் இரு விருதுகள் இப்படத்துக்குக் கிடைத்துள்ளன. சிறந்த பாடகிக்கான விருது நஞ்சம்மாவுக்கும் சிறந்த சண்டை இயக்கத்துக்கான விருது இப்படத்தில் பணியாற்றிய ராஜசேகர், மாஃபியா சசி, சுப்ரீம் சுந்தர் ஆகியோருக்கும் கிடைத்துள்ளன.



