ஸ்ரீவிலி ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்..

20220801 091127 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம்‌பக்தர்களின் விண்ணை முட்டும் கோவிந்தா கோபாலா சரணகோஷம் முழங்க வெகுவிமர்சையாக துவங்கி நடைபெற்றது.

இந்தியாவில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடி பூரம் நட்சத்திரத்தில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறும்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோவில் வளாகத்திற்குள் தங்க தேர் திருவிழா நடைபெற்றது. இந்தநிலையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தேரோட்டம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 9.05க்கு துவங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து மேள தாளங்களுடன் கீழ ரத வீதிக்கு வந்து, தேரில் எழுந்தருளிய பிறகு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து தேரோட்டம் துவங்கி நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தேரோட்ட விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தேரோட்ட நிகழ்வையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தேரோட்டத்தை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மதுரை கள்ளழகர் கோயில்களில் இருந்து பட்டு, மங்களப் பொருட்கள் நேற்று கொண்டு வரப்பட்டன.

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரை தேரோட்ட நாளில், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இருந்து மங்கலப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு ரங்கநாதருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அதற்கு எதிர் சீராக ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டத்தின் போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மாலை, மஞ்சள், குங்குமம், வளையல்கள், பழங்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் கொண்டு வரப்படுவது வழக்கம்.

இதைப்போல் மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழாவிற்கும், ஆண்டாள் கோயில் சார்பில் மங்கள பொருட்கள் வழங்கப்படுகிறது.அதன்படி நேற்று காலை 11:00 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து மங்களப் பொருட்கள் ஆண்டாள் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு சுவாமிக்கு அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

800563 andal - 2026
FB IMG 1659333250570 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories