அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு புதிய நீதிபதி நியமனம்..

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணையை இனி நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணன் ராமசாமிக்கு பதில் புதிய நீதிபதி நியமிக்கப்பட்டிருப்பது வழக்கின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை மீண்டும் உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வந்த நிலையில் வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்றக்கோரி ஓ.பி.எஸ். தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டதும், இதற்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்ததும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை இனி நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணன் ராமசாமிக்கு பதில் புதிய நீதிபதி நியமிக்கப்பட்டிருப்பது இந்த வழக்கின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நீதிபதி ஜெயச்சந்திரன் திங்கட்கிழமை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையை தொடங்கி 2 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி இருப்பதால் விடுமுறை நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் விசாரணை நடைபெற உள்ளது. இந்த மாதத்தில் வருகிற 9, 15, 19, 31 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. திங்கட்கிழமை வழக்கு விசாரணை தொடங்கும் போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க உள்ளனர். இதனால் வழக்கு விசாரணை காரசாரமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதையும் பொதுக்குழு விவரங்களையும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் கோர்ட்டில் எடுத்துக்கூற உள்ளனர்.

இது செல்லாது என்று ஓ.பி.எஸ். ஆதரவு வக்கீல்கள் வாதிட உள்ளனர். வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று 10 நாட்களில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 20-ந்தேதிக்கு பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் ஐகோர்ட்டு புதிய உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியதை தொடர்ந்து கடந்த மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓ.பன்னீர் செல்வம் அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கி வைக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்த்தே ஓ.பி.எஸ். தற்போது முறையிட்டுள்ளார். இதனால் இந்த வழக்கை விசாரிக்க போகும் நீதிபதி ஜெயச்சந்திரன் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் எந்த மாதிரியான தீர்ப்பை வழங்க போகிறார்? என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

chennaihigh1a 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories