மே.வ -ஆசிரியர்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் திகிலூட்டும் தகவல்கள்..

images 20 1 - 2026

அமலாக்கத் துறையினர் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் மேற்கு வங்கத்தில் நடந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் தோண்டத் தோண்ட திகிலூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர் கடந்த 2016 – 2019ஆம் ஆண்டுக்குள் அதாவது வெறும் 3 ஆண்டுகளில் ஏராளமான வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.500 கோடி அளவுக்கு பணப்பரிவர்த்தனை செய்திருக்கும் புதிய தகவலை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது.

அவ்வளவு ஏன், கடந்த மாதம் இருவரும் கைது செய்யப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு கூட, ரூ.1.5 கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விசாரணையில், சட்டர்ஜியின் மனைவி பப்ளி, மகள் சோஹினி, மருமகன் கல்யாண்மோய் பட்டாச்சார்யா ஆகியோரும், சந்தேகத்துக்கு உரிய பல நிறுவன விவகாரங்களில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

images 4 - 2026

அர்பிதாவின் பெயர் மற்றும் சோதனை நடத்தப்பட்ட ஒரு குடியிருப்பின் முகவரியில் ஒரு ஷெல் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, அதன் மூலமும் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. ஆனால், அந்த நிறுவனத்துக்கு என்று அலுவலகமோ, ஊழியர்களோ இருந்திருக்கவில்லை என்று அமலாக்கத் துறை கூறகிறது.

இந்த வழக்கில் ஜூலை 23ஆம் தேதியிலிருந்து  இருவரும் அமலாக்கத் துறை காவலில் இருந்து வந்தனர்.

அவர்களது காவல் முடிந்த நிலையில் கொல்கத்தாவில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டதையடுத்து,  நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேற்கு வங்க அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள், இதர ஊழியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில், சட்விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் பார்த்தா சட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அர்பிதாவுக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.49.80 கோடி ரொக்கப் பணம், நகை, தங்கக் கட்டிகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories