500x300 1727375 admk head office 1 - 2026

அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு..

சற்றுமுன்
500x300 1727375 admk head office 1 - 2026

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஆவணங்களை தாக்கல் செய்ய நாளை ஆகஸ்ட் 12‌ மாலை வரை ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புகளுக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அவகாசம் அளித்துள்ளார். ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு வாதங்களை கேட்ட நிலையில் தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ஒத்தி வைத்துள்ளார்.

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினார் வைரமுத்து தொடர்ந்த வழக்கு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று   விசாரணைக்கு வந்தது. 

நேற்று, எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்குரைஞர் விஜயநாராயணனும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் குருகிருஷ்ணகுமாரும் ஆஜராகி வாதாடினர்.அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்குகளின் விசாரணை 2-வது நாளாக இன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் தொடரப்பட்ட வழக்க்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.