இலவசங்களை  கொடுக்காதீர்கள் என உத்தரவிட முடியாது -உச்ச நீதிமன்றம்..

images 51 2 - 2026

இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை  கொடுக்காதீர்கள் என உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தோ்தலின்போது இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகள் நிதிநிலையை ஆராயாமல், இலவசங்களை விநியோகிக்கும் முறையை ஆய்வு செய்ய நிபுணா் குழுவை ஏற்படுத்த வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டம் 293 (3), (4) ஆகியவற்றுக்கு முரணாக, ஏற்கெனவே மாநில அரசுகளின் கடன் நிலுவையில் உள்ள போதிலும், இலவசங்களை விநியோகிக்க அவை கூடுதலாக கடன்பெறுகின்றன. ஆகையால், கடன் மதிப்பீட்டு முறையை ஏற்படுத்துவது அவசியம்’ என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் வந்த போது, இலவசங்களும் சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.

அப்போது, இலவச வாக்குறுதிகள் தொடர்பான வழிநாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இதனை மறுத்த உச்ச நீதிமன்றம், இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களைக் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது.  இதைக் கொடுங்கள்  இதைக் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட்டால் இந்தியா போன்ற நாட்டில் அதனை செயல்படுத்த முடியாது.

இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல். எனவே,  ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என்பதால் அதனை உச்ச நீதிமன்றம் செய்யாது.
பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில், மக்கள் நலத்திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். மக்கள் நலத்திட்டங்களுக்கும் இலவசங்களுக்கும் வேறுபாடு உள்ளது என்று கூறி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

1 COMMENT

  1. இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள் அவர்களுடைய சொந்த பணத்தில் கொடுக்க தேர்தல் ஆணையம் சட்ட விதிகள் மாற்ற வேண்டிய நேரம்இது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories