அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல விதித்த தடை இன்றுடன் நிறைவு..

500x300 1727375 admk head office 2 - 2026

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல விதித்த தடை இன்றுடன் நிறைவடைந்த நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்துள்ளார்.நாளை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கட்சிஅலுவலகம் செல்வது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் வருவாய்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

அத்துடன் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரு மாத காலத்திற்கு அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம் என்றும் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடை இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

அதிமுக அலுவலகசாமியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு, விரிவான விசாரணை மேற்கொள்ளாமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், வழக்கை ஒரு வாரத்திற்கு பிறகு விசாரிப்பதாகவும் கூறி உத்தரவிட்டார். சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல விதித்த தடை இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

தற்போது, அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பதால் நாளை கட்சி தொண்டர்களுடன் தலைமை அலுவலத்திற்கு செல்வார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தனது இல்லத்திற்கு வந்துள்ளார். இவரை காண்பதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் சேலம் வந்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகம் செல்வது தொடர்பாக இவர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என்று தெரிகின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories