சோனாலியின் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற மாநில அரசு முடிவு?

1661592278186153 - 2026

போதை பார்ட்டியில் மரணமடைந்த பாஜக நடிகை சோனாலி, தனது உதவியாளருடன் ரகசிய மனைவியாக வாழ்ந்தது அவரது குடியிருப்பு ஆவணம் மூலம் அம்பலமாகி உள்ளது. இவ்வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியானா பாஜக தலைவர்களில் ஒருவரும், நடிகையுமான சோனாலி போகத் கடந்த திங்கள்கிழமை இரவு கோவாவில் தனது நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது மர்மமான முறையில் மரணம் அடைந்தார். போதை பார்ட்டியின் போது சோனாலி போகத்துடன் அவரது தனிப்பட்ட உதவியாளர் சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் சிங் ஆகியோர் உடனிருந்தனர். இவர்கள் இருவரும், சோனாலிக்கு கட்டாயப்படுத்தி போதை பொருளை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக 2 வீடியோவும் வெளியானது.

இவ்வழக்கு தொடர்பாக இதுவரை போதை பொருள் வியாபாரி ராம மந்த்ரேகர், உதவியாளர் சுதிர் சங்வான், அவரது நண்பர் சுக்விந்தர் சிங், நடைபாதை வியாபாரி தத்தபிரசாத் கவுங்கர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2016ம் ஆண்டு அரியானாவில் பண்ணை வீட்டில் சோனாலி போகத்தின் கணவர் சஞ்சய் போகத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் சோனாலி போகத் மும்பையில் இருந்தார். சஞ்சய் மரணத்தில் மர்மம் நீடித்த நிலையில், சோனாலி போகத்தின் மரணத்திலும் மர்மம் ஏற்பட்டுள்ளதாக அவரது சகோதரி தெரிவித்தார்.

இந்த நிலையில் அரியானா மாநிலம் குர்கிராமில் உள்ள செக்டார் 102ல் அமைந்துள்ள ‘குர்கான் கிரீன்ஸ்’ சொசைட்டி குடியிருப்பில் போலீசார் சோதனையிட்டனர். அங்கு கைப்பற்றப்பட்ட குடியிருப்பு வாடகை ஆவணங்களில் சோனாலி போகத்தின் கணவர் சுதிர் சங்வான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இருவரும் இந்த குடியிருப்பில் கணவன் – மனைவியாக வாழ்ந்தது அம்பலமாகி உள்ளது. மேலும், இந்த குடியிருப்புக்கு சுதிர் சங்வான் அடிக்கடி வந்து சென்றதையும், அப்பகுதியினர் உறுதிபடுத்தி உள்ளனர்.

கோவாவுக்குப் புறப்பட்டு செல்வதற்கு முன், சோனாலி போகத்தும், சுதிர் சங்வானும் ஒரே காரில் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘சோனாலி போகத் வெளியூர் சென்றிருந்த போது அவரது வங்கி லாக்கர்கள் விவகாரங்களை சுதிர் சங்வான்தான் கவனித்து வந்துள்ளார். அவர்களது குடியிருப்பை ஆய்வு செய்த போது, சில முக்கிய ஆவணங்கள், வீட்டு சாவிகள் இருந்தன. சோனாலி போகத்தின் திடீர் மரணத்தின் பின்னணியில் பணம் மற்றும் சொத்து அபகரித்தல் விவகாரமும் இருக்கலாம். அதற்காக சோனாலியை கோவா அழைத்து சென்றிருக்கலாம். சோனாலி போகத் மரண வழக்கு மற்றும் போதை ெபாருள் வழக்கு என்று இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றனர். இதற்கிடையே சோனாலியின் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைக்க உள்ளதாக கோவா மாநில முதல்வர் சாவந்த் தெரிவித்துள்ளார்.

images 100 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories