உலகக் கோப்பை: யுஏஇ அணியை வீழ்த்தியது ஜிம்பாப்வே

Published:

zimbabwe உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று (8வது) ஆட்டத்தில் இன்று ஜிம்பாப்வே அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யுஏஇ அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த இரு அணிகளும் மோதிய போட்டி இன்று நெல்சனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய யுஏஇ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அன்வர் அதிக பட்சமாக 67 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக குர்ரம் 45 ரன்கள் எடுத்தார். கிருஷ்ண சந்திரன் 34 ரன்களும், ஸ்வனில் படேல் 32 ரன்களும் எடுத்தனர். வெற்றிக்கு 286 ரன்கள் தேவை என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சிக்கந்தர் ரசாவும், சகப்வாவும் களமிறங்கினர். ரசா அதிரடியாக விளையாடினார். சகப்வா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 57 பந்துகளில் 50 ரன்களை எடுத்தது ஜிம்பாப்வே. இந்நிலையில் 13வது ஓவரின் கடைசி பந்தில் ரசா 46 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் மசகட்சா வந்த வேகத்தில் 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய டெய்லர் அதிரடியாக விளையாடினார். 3வது விக்கெட்டுக்கு டெய்லர் – சகப்வா ஜோடி 47 ரன்கள் சேர்த்தது. சகப்வா 35 ரன்னில் ஆட்டமிழக்க, வில்லியம்ஸ் களமிறங்கினார். அவரின் அதிரடியில் ஜிம்பாப்வே அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 28வது ஓவரில் 47 ரன்னில் டெய்லர் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய மையர் 22 பந்துகளைச் சந்தித்து 9 ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் எர்வைன் களமிறங்கினர். இருவரின் அதிரடி ஆட்டத்தில் 38வது ஓவரின் போது 200 ரன்களை கடந்தது ஜிம்பாப்வே. 42 பந்தில் 50 ரன்களை குவித்தார் வில்லியம்சன். 6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 83 ரன்களை குவித்த நிலையில், எர்வைன் 42 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் சிகும்புரா(14 ரன்கள்-அவுட் இல்லை) உடன் இணைந்து, தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வில்லியம்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதனால் 48 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்த நிலையில், 286 ரன்கள் குவித்த ஜிம்பாப்வே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img