கேரளாவில் ஒரு மாதத்திற்கு மேலாக ஆடம்பர காரில் பயணித்த ராஜநாகம்..

screenshot20696 1662037792 - 2026
screenshot20687 1662037801 - 2026

கேரளா மாநிலத்தில் ஒரு வாரமாக 200 கி.மீ. தூரம் சொகுசாக காரில் பயணித்த ராஜநாகம் ஒன்று வனத்துறையினரால் பிடிபட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சுஜித். இவர் வேலை விஷயமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காரில் மலப்புரம், வழிக்கடவு சென்றார், அப்போது தான் ஓட்டி வந்த காரை அடர்ந்த காட்டு பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தாராம்.இந்த நிலையில் அந்த காரில் ஒரு ராஜநாகம் ஏறிக் கொண்டது. இதை அப்பகுதியில் உள்ள மக்கள் பார்த்துள்ளனர். உடனே சுஜித்திடம் கூறினர். அவரும் வனத்துறையினரை வரவழைத்து தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.

பாம்பு காரினுள் போயிருக்கலாம். ஆனால் அங்கு தனக்கு எந்த இரையும் கிடைக்கவில்லை என்பதை வெளியேறி காட்டுக்குள் போயிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அரை மனதுடன் காரை எடுத்துக் கொண்டு கோட்டயத்திற்கு வந்தார்.எனினும் அவருக்கு பாம்பு பயம் இருந்து கொண்டே இருந்தது. இதையடுத்து காரை சர்வீஸ் விட்டு பார்த்தார். அப்போது அந்த பாம்பு கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த பாம்பு அதிகாரிகள் சொன்னது போல் போய்விட்டதாக கருதிய சுஜித் ஒரு மாதகாலமாக தனது மனைவி குழந்தைகளுடன் அதே காரில் 200 கி.மீ. தூரம் பயணித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காருக்குள் பாம்பின் சட்டை கழற்றப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷை அழைத்து காரை முற்றிலுமாக பரிசோதனை செய்தார். அப்போதும் பாம்பு தென்படவில்லை.

இந்த நிலையில் சுஜித்தின் வீட்டருகே பெரிய பாம்பு ஊர்ந்து சென்றதை கண்ட சுஜித், உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவித்தார். அவர்கள் வந்து 10 அடி நீள பாம்பை பிடித்தனர். மீண்டும் வழிக்கடவு வனப்பகுதிக்கே கொண்டு போய் விட்டனர். ஒரு மாதத்திற்கு மேலாக ஆடம்பர காரில் பயணம் மேற்கொண்ட ராஜநாகத்தை நினைத்து சுஜித் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். ஒரு வேளை யாரையாவது தீண்டியிருந்தால் என்ன ஆகியிருக்கும். மிக கொடூரமான விஷப்பாம்பு என்பதால் நினைத்தாலே ஈரக்குலையே நடுங்குகிறது என்றனர். இச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories