தொடர்ந்து பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டதால் ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
- ஏற்காடு உள்ளிட்ட மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு
- ஜேசிபி, பொக்லைன் இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ஏற்காடு உள்ளிட்ட மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்காடு மலைப்பாதையில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜேசிபி, பொக்லைன் இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதையை சீரமைக்க ஒரு வாரம் வரை ஆகலாம் என்றும் அதுவரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.