
மதுரை செங்கோட்டை கொல்லம் ரயில் வழித்தடத்தில் பகவதிபுரம் -இடமண் இடையே உள்ள அகல ரயில் பாதையில் மின் பயமாக்கும் பணி இரவு பகலாக அதி தீவிரமாக நடந்து வருகிறது.
மதுரை விருதுநகர் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம் வழித்தடத்தில் ஏற்கனவே மதுரை செங்கோட்டை இடையே மின்மயமாக்கல் பணி முடிந்து தற்போது மின்சார இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதுபோல் புனலூர் கொல்லம் இடையேயும் மின்வழிப்பாதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
புனலூரில் இருந்து இடமண் வரை ஏற்கனவே உள்ள ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி முடிந்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு விட்டது தற்போது இட மண்ணிலிருந்து பகவதிபுரம் வரை உள்ள 24 கிலோமீட்டர் தூரம் மின்மயமாக்கல் பணி அதிவிரைவாக நடந்து வருகிறது இப்பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆரியங்காவு கணவாய் குகை தென்மலை எட்டுக்கண் பாலம் மற்றும் தென்மலை குகை போன்ற இடங்களில் அதிநவீன தொழில் நுட்ப இயந்திரங்கள் உதவியுடன் மின் போல் நடும் பணியும் மின்சார வயர்கள் பொருத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்தப் பணியில் இரவு பகலாக 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் மேற்பார்வையில் ஈடுபட்டு வருகின்றனர் தற்போது இங்கு நடைபெறும் மின்மயமாக்கல் பணியை இன்று மதுரை கோட்ட ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்