கன்னியாகுமரியில் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி, காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ‘இந்தியாவை ஒருங்கிணைப்போம்’ யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரையில் இன்று தொடங்கவுள்ளது.
இன்று மாலை கன்னியாகுமரியில் நடைபெறும் தொடக்கவிழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இந்நிலையில், பாதுகாப்பு கருதி கடற்கரை சாலை, காந்தி மண்டபம், திருவேணி சங்கமம் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கன்னியாகுமரி முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.