867315 rahul - 2026

கேரளாவில் நடை பயணத்தை துவக்கிய ராகுல்..

சற்றுமுன்

குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபயணம் சென்ற ராகுல்காந்தி இன்று கேரளாவில் கால் பதித்து தனது நடை பயணத்தை ராகுல் தொடங்கியுள்ளார்.

தமிழகத்தில் 4 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி நேற்று குமரி மாவட்டம் தலச்சன்விளையில் முடித்தார். திருவனந்தபுரம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதனை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு சுமார் 700 மீட்டர் தூரம் நடந்து வந்த ராகுல்காந்தி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். தமிழகத்தில் 4 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி நேற்று குமரி மாவட்டம் தலச்சன்விளையில் முடித்தார். குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபயணம் சென்ற ராகுல்காந்தி சுமார் 56 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், இன்று கேரள எல்லையில் தனது பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். கேரளா, செறுவாரகோணத்தில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்கினார்.

867315 rahul - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.