நான் இறக்கவில்லை.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்தி கடிதம்!

Published:

nithi - 2026

நித்தியானந்தா காலமாகிவிட்டதாக வதந்தி பரவிய நிலையில், தான் உயிரோடு தான் இருப்பதாகவும் 27 மருத்துவர்கள் தனக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் நித்தியானந்தா விளக்கம் அளித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக நித்யானந்தாவுக்கு உடல் நிலை சரி இல்லை என்றும் அவர் இறந்துவிட்டதாகவும் சில தகவல்கள் கசிய விடப்பட்டன.

இந்த தகவல்களுக்கு பதிலளிக்கும் விதமாக நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

என்ன ஆச்சு நித்தியானந்தாவுக்கு..?
இதில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி தான் இன்னும் இறக்கவில்லை ஆனால் சமாதியில் இருக்கிறேன் என நித்தியானந்தா கூறியிருக்கிறார்.

மேலும் படுக்கையில் சாய்ந்தவாறு சோர்வான தோற்றத்தில் நித்தியானந்தா இருக்கும் புகைப்படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

nithi - 2026

தன்னைப்பற்றி வதந்தி பரப்புபவர்களுக்கு தான் சொல்லிக் கொள்ள விரும்புவது, தான் எங்கும் சென்றுவிடவில்லை அல்லது சாகவும் இல்லை, சமாதியில் மட்டுமே இருக்கிறேன் என கூறியிருக்கும் நித்தியானந்தா, சரியாக பேசுவதற்கும் பக்தர்களுக்கு சத்சங்க உரை நிகழ்த்துவதற்கும் இன்னும் நாட்களாகும் என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

தன்னால் மனிதர்களை முழுமையாக அடையாளம் காண முடிவதில்லை என்றும், பெயர்கள், இடங்கள் உள்ளிட்டவையும் நினைவில் இல்லை என நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் தான் மருத்துவ சிகிச்சையிலிருந்து முழுமையாக மீளவில்லை என கூறும் நித்தியானந்தா 27 மருத்துவர்கள் தனக்கு சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளார்.

நித்தியானந்தா கைப்பட எழுதியதாக கூறப்படும் ஒரு தாளின் புகைப்படமும் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் மே 11ம் தேதி குறிப்பிடப்பட்டு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என எழுதப்பட்டுள்ளது.

nithiyanantha - 2026

நித்தியானந்தாவின் கைலாசா அதிகாரப்பூர்வ பக்கத்தில் நாள்தோறும் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடப்படும் நிலையில் அவற்றில் பெரும்பாலானவை முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு வெளியிடப்படுபவை என கூறப்படுகின்றன.

கைலாசாவில் கடுமையான நிதி நெருக்கடி இருப்பதாகவும் சிலர் கூறும் நிலையில், நித்தியானந்தாவின் உடல் நிலை குறித்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது.

Related articles

Recent articles

spot_img