கேரளாவில் நாய்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு -கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் டுவிட்..

image 3 - 2026

கேரளாவில் நாய்கள் கொடூரமாக கொல்லப்படுவதாக கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் டுவிட் செய்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி, வாகனங்களில் செல்வோரையும் விரட்டி கடிக்கின்றன. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவும், ரேபிஸ் வைரஸ் தொற்றுள்ள நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும், தெருநாய்களுக்கு உணவு கொடுப்பவரே அதனால் கடிபடும் நபருக்கான மருத்துவச் செலவை ஏற்க வேண்டும் என உத்தரவிட்டனர். கேரளாவில் இந்த ஆண்டில் இதுவரை 1 லட்சம் பேர் தெருநாய்களால் கடி பட்டுள்ளனர் என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மாநில அரசின் தகவல் படி 2022ல் இதுவரை கேரளாவில் 21 பேர் வெறிநாய்க்கடியால் இறந்துள்ளனர்.

அவர்களில், பாதிக்கப்பட்ட ஐந்து பேர், அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி ரேபிஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டனர்.

கேரளாவில் வெறிநாய்க்கடிக்கு எதிரான தடுப்பூசிகள் பயனற்றதாக மாறி வருகிறது. இது குறித்து சமீபகாலமாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனால் கேரளா முழுவதும் நாய்கள் மீது பீதி மட்டுமின்றி வெறுப்புணர்வும் நிலவுகிறது. பல சந்தர்ப்பங்களில், நாய் தாக்குதலின் பயங்கரமான சிசிடிவி காட்சிகளும் வைரலாகிவருகின்றன.

கோட்டயம் பகுதியில் மட்டும் இரண்டு மாதங்களில் 40க்கும் மேற்பட்டோர் நாய்கடிக்கு ஆளாகி உள்ளனர். இதே கோட்டயத்தில் ஒரே ஒரு குடியிருப்பு பகுதியில் மட்டும் 12 நாய்கள் இறந்து கிடந்தன. இந்த நாய்களுக்கு உள்ளூர்வாசிகள் விஷம் கொடுத்து கொன்றதாக தெரிகிறது. தற்போது கேரள மக்கள் நாய்களை கொலை செய்ய வழிவகைதேடி வருகின்றனர். கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், நாய்கள் கொடூரமாக கொல்லப்படுவதற்கு எதிராக டுவிட் செய்து உள்ளார். இது குறித்து தவான் வெள்ளிக்கிழமை செய்துள்ள டுவிட்டில். கேரளாவில் நாய்கள் படுகொலை செய்யப்பட்ட படங்கள் மிகவும் பயமுறுத்துவதாக உள்ளது. இவ்வாறான கொலைகள் தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும்.

இந்த மரணங்கள் தடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன் என கூறி உள்ளார். கோழிக்கோடு மேயர் பீனா பிலிப் தற்போது நாய்கள் தொடர்பாக தனது அறிக்கை ஒன்றில் சிக்கியுள்ளார். பினா முன்பு நாய்களைக் கொல்வதை எதிர்த்தார். ஆனால், மேயரின் இந்த அறிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்ததும், அவர் உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். பீனா, “நாய்களைக் கொல்வதை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் நாய்கள் மக்களைத் தாக்கினால், குழந்தைகளைக் கொன்றால், மக்களின் எதிர்வினையை நியாயப்படுத்த முடியாது. மக்களை குறை சொல்ல முடியாது” என கூறி உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories