இன்று புண்ணியங்கள்  பல கிடைக்கும் புரட்டாசி 3வது சனிக்கிழமை வழிபாடு..

tiruvattaru3 1657082542 - 2026
IMG 20221002 WA0075 - 2026

இன்று புண்ணியங்கள்  பல கிடைக்கும் புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை சுபதினத்தில் பஞ்சபாத்திரத்தில் இந்த நீரை வைத்தால் நம் பரம்பரையே பஞ்சமில்லாமல் வாழ்வாங்கு வாழும் என புராணங்கள் கூறுகின்றன

நாம் செய்யக்கூடிய பெருமாள் வழிபாடு நமக்கு மட்டுமல்ல, நம்முடைய சந்ததியினருக்கு கூட செல்வ வளத்தை கொடுக்கும். நாளை புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மூன்றாவது சனிக்கிழமை. இந்த மூன்றாவது சனிக்கிழமை வீட்டிலிருந்தபடியே பெருமாளை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய சிறிய ஆன்மீக ரீதியான தகவல் இதுவாகும்.

கடந்த இரண்டு சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்யாதவர்கள் கூட, இந்த சனிக்கிழமை ஏழுமலையானை வழிபாடு செய்து அருள் ஆசி பெற்றுக் கொள்ளலாம்‌

பெருமாளுக்கு ரொம்ப ரொம்ப பிடித்த விஷயம் என்றால் அது பச்சை கற்பூரம், துளசி. இது நாம் எல்லோருக்கும் தெரிந்தது. இந்த பச்சை கற்பூரத்தின் வாசம்   வீடு முழுவதும் வீச வேண்டும். பச்சை கற்பூரத்தை நுணுக்கி விளக்கேற்றும் எண்ணெயில் போடுங்கள்.

images 86 - 2026
images 87 - 2026

நீங்கள் போடும் சாம்பிராணி தூபத்தில் சிறிது பச்சை கற்பூரத்தை போடுங்கள். இன்று பெருமாளுக்காக செய்யக்கூடிய சர்க்கரை பொங்கல் நிவேதனத்தில் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தை சேர்த்து செய்யுங்கள்.
வீட்டில் பெருமாளின் திரு உருவப்படம் இருக்கும் . அந்த படத்தில் பெருமாளின் நெற்றியில் சிறிதளவு பச்சை கற்பூரம், கைகளில் சிறிதளவு பச்சை கற்பூரம், பாதங்களில் சிறிதாக பச்சை கற்பூரத்தை வைத்து விடுங்கள். அப்படி இல்லை என்றால் பெருமாளுக்கு வைக்கக்கூடிய மஞ்சள் குங்குமத்தில் இந்த பச்சை கற்பூர பொடியை கலந்து விடலாம்.
அடுத்தது பெருமாளுக்கு உகந்த விஷயம் என்றால் மாவிளக்கு. பூஜை அறையில் பெருமாளின் திருவுருவப்படத்திற்கு முன்பு மாவிளக்கு போட்டு, அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்றப்பட வேண்டும்.

கூடவே பச்சைக் கற்பூரம் சேர்த்த சர்க்கரை பொங்கல் நிவேதனமாக வைத்து விடுங்கள். பஞ்சபாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் 1 ரூபாய் நாணயத்தை போட்டு, சிறிது பச்சை கற்பூரம் துளசி இலை மஞ்சள் தூள் கலந்து பெருமாளுக்கு தீர்த்தமாக வைக்கலாம்.பின்னர் பெருமாளின் மந்திரத்தை சொல்லி, இருக்கக் கூடிய கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்

இன்று தினம் இரவு முழுவதும் இந்த தீர்த்தம் பெருமாளின் பாதங்களில் இருக்கட்டும். மற்றபடி மாவிளக்கு சர்க்கரை பொங்கல் எல்லாம் நீங்கள் பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம்.

மறுநாள் காலை எழுந்து பெருமாளுக்கு மீண்டும் ஒரு விளக்கு ஏற்றி வைத்து, பெருமாளையும் மகாலட்சுமியும் மனதார பிரார்த்தனை செய்து அந்த தீர்த்தத்திற்கு உள்ளே போட்டிருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் முடிந்து, எங்கள் குடும்பத்திற்கு இனி பண கஷ்டமே வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்து அந்த ஒரு ரூபாய் நாணயத்தை பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு இருக்கின்ற பணகஷ்டமும் படிப்படியாக குறையும். கடன் சுமையும் படிப்படியாக குறையும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். உங்கள் குடும்பமே செல்வ செழிப்போடு வாழ இந்த சின்ன பரிகாரம் வழிவகுக்கும். முயற்சி செய்து பாருங்கள். வாழ்வில் நம்பவே முடியாத நல்ல மாற்றங்களை உணர்வீர்கள் என புராணங்களில் பெருமாள் வழிபாடு முறையில் கூறப்படுகிறது.

IMG 20221004 131345 644 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories