தி.மு.க., – எம்.பி.,க் கள் பார்லியில் பெஞ்ச் தேய்த்து விட்டு வருகின்றனர். தி.மு.க. அரசு மீது மக்கள் வெறுப்புடன் இருக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.
அ.தி.மு.க., 51வது ஆண்டு துவக்க விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசுகையில், ‘தி.மு.க., மிரட்டலுக்கு பயப்படாமல், ஐ.டி., விங்க் சிறப்பாக செயல்படுகிறது. தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், கட்சியின் கொள்கை, திட்டங்கள் செயல்படுத்தியதை, மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஸ்டாலின் நிர்வாகம், தி.மு.க., அரசின் தவறுகளை முன்னாள் முதல்வர் பழனிசாமி மட்டுமே துணிச்சலாக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எப்போதும் இரு மொழிக்கொள்கையே. இந்தி விவகாரத்தில், தனது நிலைப்பாட்டை பா.ஜ., தெளிவுபடுத்தி விட்டது.
தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தியை எடுக்கச் சொல்ல வேண்டும். ‘டியூகாஸ்’ உர லைசென்ஸ் ரத்து விவகாரம், உரத்தட்டுப்பாடு, கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடர்பாக, கோவை வரும் மத்திய விவசாய துறை அமைச்சரை சந்தித்து, மனு அளிக்கப்படும்.காவிரி பிரச்னைக்காக, பார்லியை அ.தி.மு.க.,வினர் முடக்கினர். தி.மு.க. எம்.பி.,க்கள் பெஞ்ச் தேய்த்து விட்டு வருகின்றனர். தி.மு.க.வில் யாரையும் கட்டுப்படுத்த முடியாத முதல்வராக ஸ்டாலின் இருப்பதாக
அவர் கூறினார்.





