நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் களமிறங்க இருக்கிறார். வருகிற 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அங்கிருந்து சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று இரவு சந்தித்து வாழ்த்து பெற்றார். கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த நடிகர் கமல்ஹாசனை தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார்.
கருணாநிதியை சந்தித்தபின் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியல் பயணத்துக்காக தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றேன். கருணாநிதியின் அறிவுக்கூர்மை, தமிழ் மற்றும் தமிழக மக்களின் பால் உள்ள அக்கறை ஆகியவற்றை கண்டு வியந்திருக்கிறேன். எனது கொள்கையை தி.மு.க. புரிந்தபின்னர் கூட்டணி குறித்து யோசிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending