உ.பி-அரசுப்பள்ளியில் விலையுயர்ந்த மதுபானங்கள்..

933244 liq - 2026

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் விலையுயர்ந்த மதுபானங்கள் அடங்கிய ஏராளமான அட்டைப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்ட‌ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஷிநகரில் உள்ள தமுக்கி ராஜ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளியின் சமையல் அறையில் மதுபானங்கள் அடங்கிய 52 மதுபான பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்கள் விளையாடிக் கொண்டு இருந்த போது, அந்த அறைக்கு சென்றபோது, ​​அங்கு மது பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். உடனே ஆசிரியர்களும் அங்கு வந்தனர்.இதையடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மதுபாட்டில்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

இந்த பகுதி பீகார் எல்லையை ஒட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளியிலேயே மது கடத்தல்காரர்கள் மதுபாட்டில்களை வைத்திருந்து கடத்தினரா என்று சந்தேகிக்கப்படுகிறது.இந்த வழக்கில் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறியதாவது: பள்ளியில் சில கட்டுமான பணிகள் நடந்துள்ளன. அந்த அறை பொருட்களை வைக்க பயன்படுத்தப்பட்டு வந்தது, அதன் சாவி கிராம தலைவரிடம் வைக்கப்பட்டுள்ளது என்றார். மறுபுறம், அரசுப் பள்ளியில் மதுபானம் பதுக்கி இருப்பது குறித்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரித்தேஷ் குமார் சிங் கூறுகையில், பள்ளியில் இருந்து 51 மதுபானப் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து கலால் துறையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பீகாரில் மதுவிலக்குக்குப் பிறகு, ஆம்புலன்ஸ்களிலும், சில சமயங்களில் மருந்துகளுக்கு நடுவிலும் மறைத்து வைத்து மது கடத்தல்காரர்கள் உ.பி.யில் இருந்து பீகாருக்கு மதுபானங்களை கடத்துகின்றனர். முதலில் உ.பி.-பீகார் எல்லையில் இருப்பு வைத்து, அதன் பின், சந்தர்ப்பம் பார்த்து, பீகாருக்குள் மதுபானம் கடத்தப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories