100 ஆண்டுக்கால பிரச்சினை 100 நாட்களில் தீர்க்க முடியாது-பிரதமர் மோடி

– உலக நாடுகள் பொருளாதார சிக்கலில் தத்தளிக்கும் நிலையில் அதனை இந்தியா சமாளித்து வளர்ச்சி பாதையில் செல்கிறது. இறக்குமதியை நம்பியிருந்த காலம் மாறி இந்தியா தற்போது ஏற்றுமதியை அதிகரித்து வருகிற நிலையில் சில 100 ஆண்டுக்கால பிரச்சினைகளை 100 நாட்களில் தீர்க்க முடியாது என 75 ஆயிரம் பேருக்கு தீபாவளி பரிசாக இன்று வேலை பணி ஆணையை வழங்கி பிரதமர் மோடி பேசினார்.

இந்தியா முழுவதும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு 18 மாதங்களுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் அறிவித்து இருந்தார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ரெயில்வே, அஞ்சல் துறை, தொலை தொடர்பு துறை, சுரங்கம், எண்ணை கழகம் உள்பட 300-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இந்த துறைகளில் புதிதாக 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் முதற்கட்டமாக 75 ஆயிரம் பேருக்கு தீபாவளி பரிசாக இன்று பிரதமர் மோடி பணி ஆணைகளை வழங்கினார்.

ரோஜ்கர் மேளா என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதையும் படியுங்கள்: மைசூரின் பழமையான மகாராணி கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்தது இதையடுத்து பிரதமர் மோடி பேசியதாவது:- 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் கடந்த 8 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு, சுய வேலைவாய்ப்புக்கான அரசின் முயற்சிகளில் முக்கியமான மைல்கல். இன்று 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

100 ஆண்டுக்கால வேலையின்மை மற்றும் சுய வேலைவாய்ப்பு பிரச்சினையை 100 நாட்களில் தீர்க்க முடியாது. கொரோனா காலத்தில் சிறு, குறு தொழில் துறைக்கு ரூ. 3 லட்சம் கோடிக்கு மத்திய அரசின் உதவியால் 1.5 கோடிக்கும் அதிகமான வேலை இழப்புகள் தவிர்க்கப்பட்டது. உற்பத்தி, சுற்றுலா துறைகள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.

இந்த துறைகளை விரிவுபடுத்துவதில் அரசு கவனம் செலுத்துகிறது. உலக நாடுகள் பொருளாதார சிக்கலில் தத்தளிக்கும் நிலையில் அதனை இந்தியா சமாளித்து வளர்ச்சி பாதையில் செல்கிறது. இளைஞர்கள் சொந்த தொழில் செய்ய பயிற்சி மற்றும் கடன் அளிக்கப்படுகிறது. கிராம புறங்களில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இறக்குமதியை நம்பியிருந்த காலம் மாறி இந்தியா தற்போது ஏற்றுமதியை அதிகரித்து வருகிறது.

500x300 1736864 pm modi - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories